யு டர்ன் அடிக்கும் கொரோனா..மறுபடியும் முதல்ல இருந்தா..அலறும் உலக நாடுகள்..இந்தியாவிலும் கவனம்
டெல்லி: உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் பிஎப்.7 வைரஸ் தொற்றினால் சீனா, ஜப்பான் நாடுகளில் தினசரியும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஜப்பானில் 1,84,375 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் பிஎப்.7 பரவினாலும் சீனாவைப் போல இந்தியாவில் அச்சப்பட தேவையில்லை என்றாலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,01,13,124 பேராக ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 63,29,38,477 பேர் மீண்டுள்ளனர். 66,80,105 பேர் கொரோனா வைரஸ் கோர பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தொட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள்தான். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா உலக மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
சீனாவில் ஜீரோ கொரோனா கொள்கை கட்டுப்பாடுகளை தளர்த்தியபின், அங்கு நோய் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதால், மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. கொரோனாவில் உயிரிழப்பையும் சீனா சந்தித்து வருகிறது.
சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து நிலைமை மோசமடையும் என்றும் தினசரி 10 லட்சம் பேர் வரை கொரோனாவில் பாதி்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 5ஆயிரம் பேர் வரை தினசரி உயிரிழப்பைச் சந்திக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஓமிக்ரான் பிஎப்.7 வைரஸ்தான் இந்த அச்சத்திற்கு காரணம். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.
ஓமிக்ரான் பிஎப்.7 வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த குஜராத்தில் பரவியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. குஜராத்தில் இரு நோயாளிகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. கடந்த ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நேற்று வரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது 4 ஆக உயர்ந்து உள்ளது. இந்த வைரஸ், தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டத்தை நடத்தி எச்சரிக்கையின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது. மக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலங்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளன மற்றும் சர்வதேச பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே ஓமிக்ரான் பி.எப்7 இந்தியாவிலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நாட்டில் கொரோனா பாதித்தவர்களை கண்காணிக்கவும் பரிசோதனைகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை வழங்கி உள்ளார். மருத்துவ உள் கட்டமைப்புகளை மாநில அரசுகள் தயார்படுத்தவும் கேட்டு கொண்டுள்ளார்.
முதியோர் மற்றும் தொற்று பாதிக்க வாய்ப்புள்ளோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மாஸ்க் மற்றும் கொரோனா விதிகளை பின்னபற்ற வேண்டுமென்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் இந்த வைரஸ் பரவல் குறித்த அச்சம் தேவையில்லை என்று நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். கடந்த மாதம் வரை சீனாவில் கடுமையான பொதுமுடக்கம் இருந்ததால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாததால், சீனாவின் நிலை வேறு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். நிபுணர்களால் மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு காரணி, சீனா அதன் மக்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் ஆகும். அவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. சீனா மக்களே அதை ஏற்று கொள்ளவில்லை.
தற்போது நாட்டில் 10 கொரோனா வைரஸ் வகைகள் உள்ளன, சமீபத்தியது பிஎப்.7. வரவிருக்கும் மாதங்களில் சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பினால் லட்சகணக்கான மக்கள் இறக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், இந்தியாவின் நிலைமை அவ்வாறு இல்லாமல் வேறுபட்டதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
பிஎப்.7 ஒமிக்ரான் ஒரு புதிய வேரியண்ட் அல்ல, இது ஒமிக்ரான் மாறுபாட்டின் பிஏ.5 இன் புதிய திரிபுதான். இந்தியாவில் சார்ஸ்- கோவ்-2 இன் 10 வெவ்வேறு வகைகள் உள்ளன மற்றும் பி எப்.7 வைரஸ் அவற்றில் சமீபத்தியது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை உருவாக்கிய டெல்டா வகை வைரஸ் இன்னும் உள்ளது. ஓமிக்ரான் துணை வகைகளில் இது வலுவான தொற்று திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. ஒரு பாதிக்கப்பட்ட நபர் கொரோனா தொற்றை 10 முதல் 18 நபர்களுக்கு பரப்பலாம், அதன் சராசரி இனப்பெருக்கம் 10 முதல் 18.6 வரை இருக்கும். மறுபுறம், ஓமிக்ரான் சராசரி ஆர்.ஓ 5.08 ஐக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஜூலை மாதத்திலேயே பிஎப்.7 வைரஸ் வேரியண்ட் கண்டறியப்பட்டாலும் தினசரி அல்லது வாராந்திர நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை. இந்தியாவில் கண்டறியபட்ட நான்கு பிஎப்.7 வைரஸ் பாதிப்புகளும் தீவிரமானவை அல்ல. நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குணமடைந்து விட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் உள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, 3-டோஸ் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இந்தியா எந்த புதிய அலையையும் காண வாய்ப்பில்லை என்பதால் பீதி அடையாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மீண்டும் யு டர்ன் அடித்துள்ளால் மக்கள் மீண்டும் மாஸ்க் அணியும் நேரம் வந்து விட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications