விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்.. யார் இந்த விகே பாண்டியன் ஐஏஎஸ்.. ஓடிசா முதல்வரின் நிழல்?
டெல்லி : ஒடிசா முதல்வரின் தனிச்செயலாளரான தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானவரான வி.கே பாண்டியனின் விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக அம்மாநிலத்தின் செல்வாக்கு மிக்க அதிகாரியாக இருந்தவர் விகே பாண்டியன் என்ற வி கார்த்திகேய பாண்டியன். இவர் 2000 ஆண்டு ஐஏஎஸ் அதிகரியாக தேர்ச்சி பெற்றார். இவர் ஒடிசா கேடர் ஐஏஏஸ் அதிகரியாக பணியில் சேர்ந்த விகே பாண்டியன், அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சி தலைவராக பணியாற்றினார்.

இறுதியாக ஓடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவராக மாறினார். அங்கு ஆட்சியில் உள்ள பிஜி ஜனதாளம் கட்சி எம்எல்ஏக்கள் எல்லாம் விகே பாண்டியன் என்ன சொல்கிறாரோ அதன்படியே பணிகளை செய்து வந்தார். அரசின் முகமாகவும் அதிகாரத்தின் முகமாகவும் உருவெடுத்தார் விகே பாண்டியன்.
இதன் காரணமாக விகே பாண்டியன் 10 வருடங்களாக, ஒடிசா அரசியலில் அதிகார மையமாக மாறினார். ஒடிசா முதல்வருக்கு மிக நெருக்கமான அதிகாரியாக இருந்த அவர், ஒடிசா முதல்வர் பங்கேற்கும் அனைத்து முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டுவந்தார்.

ஒரு கட்டத்தில் விகே பாண்டியனை 5T என்று அழைக்கப்படும், குழு வேலை, தொழில் நுட்பம் என ஐந்துதுறைகளின் (Team work, technology, transparency, transformation and time limit) செயலாளராக நியமிக்கப்பட்டார். 5T என்பது அனைத்து துறைகளிலும் திட்டத்தையும் மதிப்பாய்வு செய்யவும் கண்காணிக்கவும் அவருக்கு அதிக அதிகாரத்தை அளித்தது. அவர் தான் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வந்தார்.
விகே பாண்டியன் முதல்வர் நவின் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் அளவிற்கு விகே பாண்டியன் ஒடிசாவில் அரசியல் மற்றும் அதிகார ஆளுமையாக உருவெடுத்தார். அண்மையில் பூரி மாவட்டத்தில் விகே பாண்டியன் ஐஏஏஸ் மீது எதிர்க்கட்சியினரால் மை வீசிப்பட்டது. அதற்கு காரணம் ஒடிசாவின் ஆளும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் முகமாக பார்க்கப்பட்டது தான்.

பிஜேடி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.வும், மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும் ஒவ்வொரு கூட்டத்திலும் விகே பாண்டியன் வந்து பேசுவார் என்று எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன. இந்த சூழலில் விகே பாண்டியன் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் விகே பாண்டியனின் விருப்ப ஓய்வுக்கு மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஓடிசா அரசின் பரிந்துரையை ஏற்று இந்திய அரசின் துணைச் செயலாளர் பூபிந்தர் பால் சிங், ஒடிசா பொது நிர்வாகம் மற்றும் முதுநிலை துறையின் கூடுதல் தலைமைச் செயலருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த சூழலில் நவீன் பட்நாயக்கிற்கு ஆதரவாக விகே பாண்டியன் அரசியலில் இறங்கப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவரது விருப்ப ஓய்வு உடனடியாக அவர் அரசியலில் இறங்குவதற்கான ஊகத்தை கிளப்பி உள்ளது.செய்தியாளர்களிடம் பேசிய ஒடிசாவின் மூத்த பத்திரிக்கையாளர் பிரசன்னா மொகந்தி, "வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்குப் பிறகு அவர் அரசியலில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றார்
ஓய்வுபெற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்கின் வாரிசாக இருக்கலாம் என்று ஒடிசா மாநில அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுன் ஓடிசாவிற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற போகிறது. எனவே விகே பாண்டியனின் ராஜினாமா முக்கியமானதான பார்க்கப்படுகிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications