டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ1,500 கோடியில் 30 கோடி பயாலஜிக்கல்-இ தடுப்பூசிகளை பெற நடவடிக்கை- மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: ஹைதராபாத்தில் இயங்கும் பயாலஜிக்கல்-இ என்ற கொவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 30 கோடி தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த தடுப்பூசி டோஸ்கள், வரும் ஆகஸ்ட்- டிசம்பர் மாதங்களில் உற்பத்தி செய்து, வழங்கப்படும். இதற்கென முன்பணமாக ரூ.1500 கோடியை சுகாதார அமைச்சகம், பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் அளிக்கும்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

Centre finalises 30 cr COVID19 Vaccine doses from Biological-E

முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றி அடைந்ததை அடுத்து, பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை‌ தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் திட்ட முன்மொழிவை கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு முறையாக ஆய்வு செய்து அதன் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளது. உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிதி உதவியில் ஆதரவு அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பயாலஜிக்கல்-இ நிறுவனத்துடனான மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

தற்சார்பு இந்தியா நிதி உதவித் திட்டம் 3.0-வின் ஒரு பகுதியாக, கொவிட்-19 தடுப்பூசியின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய கொவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டமான கொவிட் சுரக்‌ஷா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Union Ministry of Health has finalised arrangements with Hyderabad based vaccine manufacturer Biological-E to reserve 30 crore of COVID-19 vaccine doses. These vaccine doses will be manufactured and stockpiled by M/s Biological-E from August-December 2021. For this purpose, the Union Ministry of Health would be making an advance payment of Rs. 1500 crore to M/s Biological-E.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X