ஆலோசனை நோ! கட்சியில் சேருங்க! ’பிகே’வை பிடிக்க தூண்டில் போட்ட காங்கிரஸ்! ஓகே சொன்ன பிரசாந்த் கிஷோர்?
டெல்லி : தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேருமாறும், ஆலோசகராக பணியாற்ற வேண்டாம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியான அவர் கட்சியில் சேர ஆர்வம் காட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் முக்கிய தலைவர்களை இன்று நேரில் சந்தித்து பேசினார். அவர் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்வாக கருதப்பட்டது.
இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, அஜய் மக்கான் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
சந்திப்பின் போது பிரசாந்த் கிஷோர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான விரிவான திட்டம் குறித்த விளக்கத்தையும் அளித்துள்ளார் எனவும், அவரது ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதைப் பற்றி ஆராய குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், இந்த சந்திப்புக்குப் பிறகு கூறினார்.

முக்கிய பேச்சுவார்த்தை
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் குஜராத் தேர்தலை மையமாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை மற்றும் பிரசாந்த் கிஷோர் 2024 தேர்தல் பற்றி விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தவுடன், 2024 பொதுத் தேர்தல் மற்றும் குஜராத் போன்ற மாநில தேர்தல்களில் பிரசாந்த் கிஷோரின் பணி தொடங்கும் என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்சியில் சேர ஆர்வம்
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிந்தபின் தன்னுடைய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேரப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்ப கடந்த ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசி காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கத்தை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தில் முடிவு
இந்த சந்திப்பின் போது தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேருமாறும், ஆலோசகராக பணியாற்ற வேண்டாம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியான அவர் கட்சியில் சேர ஆர்வம் காட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியை மறு சீரமைக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், கட்சியில் சேராமல் ஆலோசனையாளராகவே தொடர விரும்புவதாகவும் மே மாதத்திற்குள் இது குறித்துஅவர் முடிவு எடுப்பார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications