டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா ஊரடங்கு: தடுப்பூசி போடுவதில் தடைகள் ஏற்படக்கூடாது - மத்திய அரசு சுற்றறிக்கை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப் படக்கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 2.75 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு முழு லாக்டவுன்

ஞாயிறு முழு லாக்டவுன்

தமிழகத்தில் நேற்று 1,10,130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10,723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

தடுப்பூசி போடும் பணி

தடுப்பூசி போடும் பணி

இது போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப் படக்கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. இது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கட்டுப்பாடுகளால் பாதிப்பு வரக்கூடாது

கட்டுப்பாடுகளால் பாதிப்பு வரக்கூடாது

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது.

தடுப்பூசி மையம்

தடுப்பூசி மையம்

தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், மருத்துவமனையின் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்கவேண்டும். அதை, அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

English summary
In many states, curfews and other restrictions have been imposed to prevent the spread of the corona virus. The central government has issued a circular stating that corona vaccination activities should not be affected by these restrictions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X