50 ஆயிரத்துக்குள் வந்த கொரோனா பாதிப்பு.. இந்த ஆண்டு இந்தியாவுக்கு எப்போது விடை கொடுக்கும் கொரோனா..?
டெல்லி : இந்தியாவில் இன்று மேலும் 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை விட சுமார் 5 ஆயிரம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மொத்த கொரோனா பாதிப்பு 4,26,31,421 ஆக உயர்ந்துள்ளது
Recommended Video
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடமும் கொரோனா 3வது அலை இந்தியாவில் திடீர் எழுச்சியைக் கண்டது
கடந்த ஜனவரி மாதத்தில் திடீரென தினசரி பாதிப்பு உச்சம் தொட்டது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போதிலும் கடந்த அலைகளைப் போல உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படவில்லை. மேலும் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

கொரோனா 3வது அலை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் இன்று மேலும் 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை சுமார் 5 ஆயிரம் குறைவாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 877 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

684 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஒரே நாளில் 684 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதன் காரணமாக கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லடசத்து 8 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,17,591 பேர் மீண்டுள்ளதாகவும், இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 15 லட்சத்து 85 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 97.55 % ஆக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தற்போது 5 லட்சத்து 37 ஆயிரம் 045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,16,801 பேருக்கும், இதுவரை 1,72,81,49,447 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று மட்டும் ஒரே நாளில் 14,15,279 கொரோனா மாதிரிகளும், இதுவரை மொத்தம் 75,07,35,858 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது.

மக்களுக்கு அறிவுறுத்தல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைக்க முடியும் என கூறும் நிபுணர்கள் மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடித்தால் தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் இதற்காக மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications