டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5%ஐ தாண்டிய "பாசிட்டிவிட்டி" சதவிகிதம்.. 90% இந்தியாவில் மோசமடைந்த பாதிப்பு.. தீவிரமடையும் கொரோனா

Google Oneindia Tamil News

டெல்லி: 90% இந்தியாவில் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் 5%க்கும் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போதையை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 23,311,156 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 319,229 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம் ஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம்

253,620 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 3593 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர். 3,713,398 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

எத்தனை

எத்தனை

இந்தியாவில் தற்போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது. கிராமங்களுக்கு கொரோனா கேஸ்கள் வேகமாக பரவுவதால் கிட்டத்தட்ட 90% இந்தியாவில் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் அதிகரித்து வருகிறது. பாசிட்டிவிட்டி சதவிகிதம் என்பது மொத்தமாக டெஸ்ட் எடுக்கப்பட்ட நபர்களில் எத்தனை பேருக்கு கொரோனா ஏற்படுகிறது என்பதை குறிக்கும் சதவிகிதம் ஆகும்.

மோசம்

மோசம்

அதன்படி இந்தியாவில் உள்ள 734 மாவட்டங்களில் 640 மாவட்டங்களில் பாசிட்டிவிட்டி ரேட் 5%க்கும் அதிகமாக உள்ளது. அதாவது 100 பேரை சோதனை செய்தால் 5 பேருக்கு கொரோனா வருகிறது. இது மிக அதிகம் ஆகும். இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மோசமாக பரவி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காரணம்

காரணம்

இந்தியாவில் மருத்துவமனைகள் நிரம்பி வருவதற்கும், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவும் இந்த பாசிட்டிவிட்டி ரேட் அதிகம் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த அலையில் பெரியதாக பாதிக்கப்படாத இமாச்சல பிரதேசம், நாகலாந்து போன்ற மாநிலங்களில் கூட இந்த முறை பாசிட்டிவிட்டி ரேட் மிக மோசமாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இப்படி பாசிட்டிவிட்டி ரேட் உயர்ந்து வரும் நிலையில் கிராமங்களிலும், சிறிய சிறிய மாவட்டங்களிலும் டெஸ்டிங்கை வேகப்படுத்தும்படி ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது. ஆர்டி பிசிஆர் டெஸ்டுக்கு பதிலாக வேகமாக ராபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் சங்கிலியை தடுக்க இதுதான் ஒரே வழி என்பதால் ஐசிஎம்ஆர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எப்படி சோதனை

எப்படி சோதனை

70-30 என்ற விகித்தில் ஆர்டிபிசிஆர் - ரேபிட் ஆண்டிஜன் சோதனையை நடத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.ஊரகப் பகுதிகளில் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. அதோடு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை கண்காணிக்க வேண்டும்.

10% அதிகம்

10% அதிகம்

10%க்கும் அதிகமாக பாசிட்டிவிட்டி கொண்ட அல்லது 60%க்கும் அதிகமாக மருத்துவமனை பெட்கள் நிரம்பிய மாவட்டங்களை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தனி அதிகாரி நியமித்து கண்காணிக்க வேண்டும், 14 நாட்கள் இங்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இங்கு சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

English summary
90% India has more Coronavirus positivity rate than 5% says Central Health Ministry report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X