டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா விவகாரத்தில் டாக்டர் ஹர்ஷ்வர்தனை பலிகடாவாக்கிய மோடி... ராஜ்யசபாவில் மல்லிகார்ஜூன கார்கே

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனை நீக்கிய பலிகடாவாக்கிவிட்டார் பிரதமர் மோடி என்று ராஜ்யசபாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது நாளான இன்றும் பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ராஜ்யசபாவில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த அமளிக்கு நடுவே மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:

பள்ளி சுவற்றில் பிறந்த நாள் போஸ்டர்.. திமுக எம்எல்ஏ செய்த சூப்பர் காரியம்.. குளித்தலையில் ஆச்சர்யம் பள்ளி சுவற்றில் பிறந்த நாள் போஸ்டர்.. திமுக எம்எல்ஏ செய்த சூப்பர் காரியம்.. குளித்தலையில் ஆச்சர்யம்

மருத்துவர்களுக்கு சல்யூட்

மருத்துவர்களுக்கு சல்யூட்

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மரியாதையை செலுத்துகிறேன். அதேபோல் ஆக்சிஜன் வழங்கியவர்கள், பிளாஸ்மா தானம் கொடுத்தவர்களுக்கும் என் மரியாதையை செலுத்துகிறேன்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி

வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி

கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் பிரதமர் மோடி பாத்திரங்களை தட்டச் சொன்னார்.. மெழுகுவர்த்தி ஏற்றச் சொன்னார்.. மக்களும் இதனை எல்லாம் செய்தனர். ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார்.

பலிகடாவான ஹர்ஷ்வர்தன்

பலிகடாவான ஹர்ஷ்வர்தன்

ஆனால் இதற்கு தாம் பொறுப்பேற்காமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஹர்ஷ்வர்தனை பதவி நீக்கம் செய்து பலிகடாவாக்கிவிட்டார் பிரதமர் மோடி. ஒரே இரவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைப் போல ஒரே இரவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசுதான் பொறுப்பு

மத்திய அரசுதான் பொறுப்பு

லாக்டவுனை அறிவித்த அரசு, நடைமுறைப்படுத்த எந்த தயார் நிலையிலும் இல்லை. மக்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்கள் இயக்கப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மீறப்பட்ட கட்டுப்பாடுகள்

மீறப்பட்ட கட்டுப்பாடுகள்

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சொன்னத்து மத்திய அரசு. ஆனால் சட்டசபை தேர்தல்களின் போது அவர்களே இந்த கட்டுப்பாடுகளையும் மீறினர். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

English summary
Senior Congress leader Mallikarjun Kharge said that Forme Union Health Minister Harsh Vardhan was made a scapegoat by PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X