உலகம் முழுவதும் அதி தீவிரமாக பரவும் கொரோனா - 20.54 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை அதிதீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 6,73,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா மூன்றாவது அலை உலகம் முழுவதும் அதி தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 6,73,420 பேர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 20,54,29,867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,44,29,017 பேராக உயர்ந்துள்ளது.

உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது.

 Covid 19 Update Aug 12,2021: Corona 20,54,29,867 people affected in worldwide

கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால் பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பலர் தயக்கம் காட்டினாலும் இரண்டாவது அலையின் பாதிப்பை அனுபவித்தவர்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்தியா முழுவதும் 52 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் மொத்தம் 20,54,29,867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 564,855 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,44,29,017 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 10,199 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,36,640 பேராக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரே நாளில் 1,16,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 3,70,27,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 3,00,00,182 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் ஒரே நாளில் 607 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6,35,629 பேராக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 35,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,02,49,176பேராக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மொத்தம் 1,90,92,832 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஒரேநாளில் 1,123 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 5,66,013 பேராக அதிகரித்துள்ளது.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil

    ரஷ்யா நாட்டில் கொரோனாவால் 21,571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுவதும் மொத்தம் 65,12,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 58,08,777 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 799 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 1,67,241 பேர் மரணமடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+