கொரோனா பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - துளிர்க்கும் நம்பிக்கை

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,04,756 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 367,352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,04,756 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மொத்தம் 16,71,61,440 பேர் மீண்டுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா கொடுந்தொற்று காரணமாக உலக மக்களின் இயக்கம் முற்றிலும் முடங்கிப் போனது. பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் அலை ஓய்ந்த பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

Covid 19 Update: Corona 16.71 crore people recovered in worldwide

2020ஆம் ஆண்டின் இறுதிவரை கொரோனாவின் தாக்கம் பரவலாக இருந்த நிலையில் 2021ஆண்டில் பல நாடுகளில் இரண்டாவது அலை வீசத் தொடங்கியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியாதான். தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது.

உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 8 லட்சத்திற்கு மேல் பதிவானது. கடந்த மார்ச் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கடந்த எப்ரல் முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது. இதன் காரணமாக 4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 45 ஆயிரமாக குறைந்துள்ளது.

உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 3,67,352 பேராக குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,25,59,723 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,04,756 பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மொத்தம் 16,71,61,440 பேர் மீண்டுள்ளனர்.

கொரோனாவால் ஒரே நாளில் 7,438 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 3,953,289 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,14,44,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 79,960 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மக்களிடையே நம்பிக்கையும் நேர்மறை எண்ணங்களும் அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+