டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு வழக்கு.. நாளை தீர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசி ஆசை என்ன? மௌனம் காக்கும் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்|Nirbhaya convicts about their last wish

    டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி டெல்லி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

    2012 டிசம்பரில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    Delhi HC to Pronounce Tomorrow Order on Plea Challenging Stay on Execution of Nirbhaya Case Convicts

    இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

    இந்நிலையில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கருணை மனுக்கள் தாக்கல் செய்த காரணத்தால் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. முதலில் முகேஷ் சிங் கருணை மனு அளித்ததால் டத் வாரண்ட் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக பவன் குப்தா மனுவால் தள்ளிப்போனது இப்படி அடுத்தடுத்து குற்றவாளிகள் மனு தாக்கல் செய்த காரணத்தால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

    கன்னித்தீவு கதை போல் நீளும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு... தொடரும் கைதுகள்கன்னித்தீவு கதை போல் நீளும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு... தொடரும் கைதுகள்

    இறுதியில் பிப்ரவரி 1ம் தேதி தண்டனை நிறைவேற்றபட இருந்த நிலையில இறுதியாக வினய் குமார் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த சூழ்நிலை காரணமாக 4பேரின் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மறு உத்தரவு வரும் வரை 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட கூடாது என்று டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 31ம் தேதி தடை விதித்தது.

    இதையடுத்து நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும் அவர்களை தனித்தனியாக தூக்கிலட அனுமதி கோரியும் டெல்லி திகார் சிறை நிர்வாகம்( மத்திய அரசு சார்பில்) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

    English summary
    Delhi High Court to Pronounce Tomorrow Order on Centre's Plea Challenging Stay on Execution of Nirbhaya Case Convicts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X