டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி
டெல்லி: டெல்லியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உணவகத்தின் பேஸ்மெண்ட் தளத்தில் இருந்து தீ பரவத் தொடங்கியதால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் நாலாபுறமும் அலறியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ள சூழலில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இப்போது இந்தியா முழுக்க கோடை காலம் படுத்தி எடுக்கிறது. அதிலும் எல் நினோ காரணமாக வழக்கத்தை விடவும் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சிறு சிறு சம்பவங்களாலும் கூட எளிதாக தீ விபத்து ஏற்பட்டுவிடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தீ விபத்து தான் இப்போது நடந்துள்ளது.

தீ விபத்து
டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் 'லெமன் கிரீன் ரெஸ்டாரன்ட்' என்ற பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று புதன்கிழமை காலை வழக்கம் போல உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் இருந்தனர். காலை சுமார் 9:45 மணியளவில் உணவகத்தின் பேஸ்மென்ட் பகுதியில் இருந்து திடீரெனக் கரும்புகை வெளியேறத் தொடங்கியது.
சில நிமிடங்களிலேயே தீ மளமளவென உணவகம் முழுவதும் பரவத் தொடங்கியது. பேஸ்மென்ட்டில் தீப்பிடித்ததால், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் உணவகத்திற்கு வந்திருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டனர்.
தீயணைப்பு வாகனங்கள்
இச்சம்பவம் குறித்து உடனடியாக டெல்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கின. உணவகத்திற்குள் இன்னும் பல பேர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவியதால், தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் உள்ளே புகுந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
20 பேர் உயிரிழப்பு
இந்த கோர விபத்தில், தீப்புகை மூட்டத்திலும் வெப்பத்திலும் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தீயணைப்பு வீரர்களின் துரித முயற்சியால் கட்டிடத்திற்குள் தவித்துக் கொண்டிருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பேஸ்மென்ட்டில் சிக்கி மூச்சுத்திணறலால் ஆபத்தான நிலையில் இருந்த 3 நபர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காரணம் என்ன?
இந்த தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பேஸ்மென்ட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததா அல்லது மின் கசிவு காரணமா என்பது குறித்து டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications