உடனே ஆக்சன் எடுங்க.. உருமாறிய 'டெல்டா பிளஸ்' வைரஸ்.. மத்திய அரசு மாநிலங்களுக்கு வார்னிங்
டெல்லி : மிகவும் தீவிரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது.
டெல்டா பிளஸ் மரபணுமாற்ற வைரசின் பரவக்கூடிய தன்மை, நுரையீரல் உயிரணுக்களில் இந்த வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்திகளிடம் தப்பிக்கும் குணம் ஆகியவை குறித்து குறிப்பிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும். கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்திய சுகாதார துறை அமைச்சகம், சோதனையை தீவிரப்படுத்தி டெல்டா பிளஸ் பாசிட்டிவ் வந்த நபர்களை உடளே கண்டறிந்து தொற்று நோய் பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சுகாதாரதுறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நடவடிக்கை தேவை
மேலும் தனது கடிதத்தில். தொற்று பரவ வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். கொத்துக்கொத்தாக பரவும் முன் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது, டெல்டா பிளஸ் கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுப்பது மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்துவது, உடனடியாக அவர்களுடன் தொடர்புடையவர்களை தடமறிதல் மற்றும் தடுப்பூசிக்கு ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மாநிலங்களுக்கு கடிதம்
ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது, நாட்டில் இதுவரை 50 பேருக்கு மேல் பாதித்துள்ள டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உள்ள இந்த மாநிலங்களில் தொற்றை தடுக்க உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளது.
Recommended Video

தடுபபூசி முக்கியம்
டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதால் எந்தவொரு தளர்வு அளிக்கும் முன்பும் கவனமாக நிலைமையை கவனித்து செயல்பாடுமாறு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பிளஸ் வைரஸை பல காரணங்களுக்காக உலக சுகாதார நிறுவனம் (WHO) 'கவலைக்குரிய மாறுபாடு' என்று பெயரிட்டுள்ளது என்று டாக்டர் அர்ச்சனா தவான் பஜாஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது, "டெல்டா பிளஸ் வைரஸ், மருந்து, சிகிச்சை மற்றும் தடுப்பூசியில் இருந்து தப்பிக்கிறது, எனவே, தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இறப்பு அதிகரிக்கும்
டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக அதிகம் பேர் மருத்துவமனையில் சேருதல், தீவிரமான நோய் தன்மை, ஐசியுவிற்கு செல்லும் நிலை அதிகரிப்பு. இறப்பு அதிகரிப்பு போன்றவை அதிகரிக்கும என்றும எச்சரிக்கிறார் அர்ச்சனா தவான் பஜாஜ். இதனிடையே COVID-19 ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் என்பதால் விரைவாகவே புதிது புதிதாக உருமாற்றம் அடையும் போக்கு உடையது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், எனவே, உலகம் முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications