எது எய்ட்ஸா? ஓபிஎஸ் மகனுக்கு தமிழில் மத்திய அமைச்சர் பதில்! ஒன்னுமே புரியல.. கூகுள் டிரான்ஸ்லேட்டா?
டெல்லி: பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தருவது குறித்து மக்களவை கேள்வி நேரத்தில் அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ள நிலையில், அதில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் தெளிவாக இல்லாமல் பிழையாக மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதாக விமர்சனம் எழுந்து உள்ளது.
"கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் உட்பட 58,801 பள்ளிகளில் 17,579 பள்ளிகளில் மட்டுமே அடிப்படை வசதிகள் உள்ளன என்பது உண்மையா?
அப்படியானால், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் உட்பட, சாய்வுப் பாதைகள், கைப்பிடிகள் மற்றும் சக்கர நாற்காலி அணுகல் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அரசாங்கம் ஏதேனும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறதா?அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று ரவீந்திரதாத் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

தர்மேந்திர பிரதான் பதில்
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக் சபாவில் அளித்திருக்கும் எழுத்துப் பூர்வ பதிலில், "லோக் சபா நட்சத்திரக் கேள்வி எண்ணின் பகுதிகள் (அ) முதல் (இ) வரையிலான பதிலில் குறிப்பிடப்படும் அறிக்கை. *180, மாண்புமிகு எம்.பி., ஸ்ரீ ப ரவீந்திரநாத். லோக் சபாவிடம் கேட்டபோது, 19.12.2022 அன்று பதிலளிக்கப்படும்.

ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு
சிறப்புத் தேவை குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள்' குறித்து பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL), கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும் பள்ளிக் கல்வியின் குறிகாட்டிகள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்ய, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) அமைப்பை உருவாக்கியுள்ளது. UDISE+ 2021-22 இல் பதிவுசெய்யப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் (CwSN) உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, அதாவது சாய்வுதளம், கைப்பிடிகள் மற்றும் CWSN கழிப்பறை வசதிகள் உள்ளன.

கட்டாய கல்வி உரிமை சட்டம்
கல்வியானது அரசியலமைப்பின் ஒரே நேரத்தில் உள்ள பட்டியலில் உள்ளது மற்றும் பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த மாநிலம்/UT அரசாங்கத்தின் செயல்பாட்டுக் களத்தில் உள்ளன. RTE சட்டத்தின் பிரிவு 12(1)(c)ஐ நடைமுறைப்படுத்த, RTE சட்டத்தின் கீழ் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு, பின்தங்கிய குழுக்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும், குழந்தை செலவின் படி அறிவிக்க வேண்டும் மற்றும் சேர்க்கைகளை தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசு வகுத்துள்ள நடைமுறைப்படி தனியார் உதவி பெறாத பள்ளிகள்.

சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவித் திட்டம்
சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவித் திட்டம், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் கல்வியை முதல் வகுப்பு முதல் XII வகுப்பு வரை தொடர்ச்சியாகப் பார்ப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. CWSN ஐ முறையான பள்ளிக் கல்வியில் சேர்ப்பது அல்லது பிரதான நீரோட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (RPWD) சட்டம், 2015 இன் குறைப்பாடுகள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள அனைத்து CwSN ஐயும் இந்தத் திட்டம் உள்ளடக்குகிறது.

எது எய்ட்ஸா?
சேர்ப்பதற்கான கொள்கையின்படி, குறிப்பிட்ட மாணவர் சார்ந்த தலையீடுகள் மூலம் CwSNக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. அதாவது, எய்ட்ஸ் மற்றும் உபகரணங்கள், கற்பித்தல் உதவிகள், உதவி சாதனங்கள், அடையாளம் மற்றும் மதிப்பீட்டு முகாம்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள், பிரெய்லி புத்தகங்கள்/உதவி சாதனங்கள், போக்குவரத்து கொடுப்பனவுகள், சீருடைகள் (RTE இன் கீழ்), பொது ஆசிரியர்களுக்கு பயிற்சி தவிர பெண்களுக்கான உதவித்தொகை, சிறப்பு நிதி உதவி கல்வியாளர்கள், முதலியன உள்ளன.

மத்திய அரசு ஆதரிக்கிறது.
இந்த தலையீடுகள் பொதுப் பள்ளிகளில் அவர்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்ய வழங்கப்படுகின்றன. கூடுதலாக, பிரிவு 12(1)(c) இன் கீழ் குழந்தைகளின் சேர்க்கைக்காக தனியார் பள்ளிகளுக்கு திருப்பிச் செலுத்தும் செலவினங்கள் உட்பட கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு ஆதரிக்கிறது.

தமிழ்நாட்டிற்கான உதவி
தமிழ்நாடு உட்பட மாநில வாரியாக 2022-23 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷாவின் கீழ் உள்ளடக்கிய கல்வி (IE) கூறுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செலவினம் இணைப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மட்டத்தில் சிகிச்சை தலையீடுகள் மூலம் தனிப்பட்ட ஆதரவு வழங்கப்படுகிறது. மேலும், தனிப்பட்ட கவனம் தேவைப்படும் கடுமையான குறைபாடுள்ள CWSN சிறப்புக் கல்வியாளர்கள் மூலம் வீட்டு அடிப்படையிலான கல்வி வழங்கப்படுகிறது.

சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள்
சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் கல்வித் தேவைகளை தொடக்க நிலை முதல் உயர்நிலை நிலை வரை சரியான முறையில் நிவர்த்தி செய்வதற்காக சிறப்புக் கல்வியாளர்களுக்கான நிதி உதவிக்கான தனி ஏற்பாடும் சமக்ரா சிக்ஷாவின் கீழ் செய்யப்பட்டு உள்ளது. சமாக்ரா ஷிக்ஷாவில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளுக்கு தடையின்றி அணுகுவதற்காக சாய்வுப் பாதைகள், கைப்பிடிகள் மற்றும் ஊனமுற்றோருக்கான நட்புக் கழிப்பறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. உடல் ஊனமுற்ற குழந்தைகளின் அணுகலுக்கான சமக்ரா சிக்ஷாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி உள்கட்டமைப்பு விவரங்கள் பின்வருமாறு: -https://pbs.twimg.com/media/FkZ6YbCUEAAjxoL?format=jpg&name=large

முழு பட்டியல்
லோக் சபா நட்சத்திரக் கேள்வி எண் (ஆ) மற்றும் (இ) பகுதிகளுக்குப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பு, *180 லோக் சபாவில் மாண்புமிகு எம்.பி.,ஸ்ரீ பி ரவீந்திரநாத் அவர்கள் கேட்டதற்கு, 19.12.2022 அன்று பதிலளிக்கப்படும், சிறப்பு தேவை குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள்' குறித்து 2022-23 ஆம் ஆண்டிற்கான IE கூறுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செலவு.." என முழு பட்டியலையும் மாநில வாரியாக இணைத்து மத்திய அமைச்சர் பதிலளித்து இருக்கிறார்.

உதவிக்கு பதில் எய்ட்ஸ்
நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தற்போது தமிழிலும் பதிலளிக்கப்பட்டு வரும் நிலையில், அது சரியாக புரியவில்லை என்றும், நேரடியாக கூகுளில் டிரான்ஸ்லேட் செய்து புரியாத வகையில் பதிலறிக்கை வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மெய்பிக்கும் வகையில் ஓ.பி.ஆருக்கு தர்மேந்திர பிரதான் அளித்த தமிழ் பதிலில், "உதவி" என்று வருவதற்கு பதிலாக "எய்ட்ஸ்" என்று தவறான அர்த்தம் தரும் வார்த்தை வருகிறது.

நட்புக் கழிப்பறைகளா?
அதேபோல் ஊனமுற்றோர் என்ற வார்த்தை தற்போது தமிழில் பயன்படுத்தப்படுவது இல்லை. அதற்கு மாற்றாக மாற்றுத் திறனாளிகள் என்றே அரசும் ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. ஆனால், இதில் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்கள். மற்றொரு இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகள் என குறிப்பிடுவதற்கு மாற்றாக "ஊனமுற்றோருக்கான நட்புக் கழிப்பறைகள்" என்று அமைச்சரின் பதிலில் இடம்பெற்று உள்ளது. Handicap friendly toilets என்பதை கூகுளில் டிரான்ஸ்லேட் செய்து இவ்வாறு கொடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications