டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெகாசஸ் விவகாரம்... தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. மக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி வீண்

Google Oneindia Tamil News

டெல்லி: பெகசாஸ் விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில், இதனால் பொதுமக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரியாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக பெகாசஸ் விவகாரம் வெளியானது. இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை மூலம் ஒருவரது மொபைலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்.

இதன் மூலம் ஒருவர் யாருடன் என்ன பேசுகிறார், எங்குச் செல்கிறார் என அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். அதாவது அவர் செல்போனின் அனைத்து விஷயங்ளையும் கண்காணிக்க முடியும்.

டெல்லி ஜந்தர் மந்தரில் களைகட்டிய விவசாயிகள் நாடாளுமன்றம்... பேச்சுவார்த்தை தயார்- வேளாண் அமைச்சர் டெல்லி ஜந்தர் மந்தரில் களைகட்டிய விவசாயிகள் நாடாளுமன்றம்... பேச்சுவார்த்தை தயார்- வேளாண் அமைச்சர்

பெகாசஸ் விகாரம்

பெகாசஸ் விகாரம்

இந்த பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி காங்கிரஸின் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் முக்கிய தலைவர்கள், 40 செய்தியாளர்கள் உட்படப் பலரது செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. நாடாளுமன்றத்தின் முதல் நாள் தொடங்கி அனைத்து நாட்களிலும் பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

மோடி குற்றச்சாட்டு

மோடி குற்றச்சாட்டு

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தக் கூட எதிர்க்கட்சிகள் விடவில்லை. நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்கள் அதிகரித்ததால், முதல் நாளே இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. மத்திய அமைச்சரவையில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் அதிகம் இடம் பெற்றுள்ள நிலையில், அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமலேயே எதிர்க்கட்சிகள் அவையை முடக்குவதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

Recommended Video

    How does the Pegasus spyware hack into someones phone?| Explained
    ரூ 133 கோடி நஷ்டம்

    ரூ 133 கோடி நஷ்டம்

    இந்நிலையில், நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியுள்ளதால் மக்களின் வரிப்பணம் சுமார் 133 கோடி ரூபாய் வீணாகியுள்ளதாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்றம் மொத்தம் 107 மணி நேரம் செயல்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையை முடக்கியதால் வெறும் 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 54 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மக்களவை வெறும் ஏழு மணி நேரமும், 53 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மாநிலங்களவை வெறும் 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    முன்னதாக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கடினமாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதே எனது நோக்கம், ஆனால் அதேநேரம் அமைச்சர்கள் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    More than ₹ 133 crores in taxpayer money has been lost because of parliament disruptions in the monsoon session. the deadlock between Prime Minister Narendra Modi's administration and the opposition over the Pegasus snooping scandal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X