டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அகவிலைப்படி அதிரடியாக உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அக்டோபர் மாதத்தில் பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும். தீபாவளி பண்டிகை மாதமான இந்த மாதத்தில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மத்திய அமைச்சரவை புதன்கிழமை கூடி எடுத்த முடிவினை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று அறிவித்தார்.

Diwali Gift for Govt Employees as Dearness Allowance rised By 5% to 17%

இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அத்துடன் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

கடந்த ஆண்டு 12 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது 17 சதவீதமாக உயர்ந்திருப்பது நிச்சயம் தீபவாளி பரிசாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஒட்டுமொத்தமாக 16 ஆயிரம் கோடி செலவாகும்.

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கை செலவுகளை சரிசெய்வதற்கு கொடுக்கப்படுவதாகும். நாட்டின் பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க அடிப்படை சம்பளத்தில் இருந்து அரசு அறிவிக்கும் சதவீதம் கூடுதலாக பணம் கிடைக்கும். 17 சதவீதம் என்று அரசு இந்த ஆண்டு அறிவித்துள்ளதால். அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 17 சதவீதம் அதிகமாக பணம் இந்த முறை கிடைக்கும்.

English summary
Diwali GiftD: dearness Allowance For Government Employees Raised By 5%
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X