ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!
டெல்லி: இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியை இந்தியா கூட்டணி தலைவர்கள் விமர்சிக்கும் வகையில், திமுக பேனர்களை வைத்திருப்பது காங்கிரஸை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், தற்போது தவெகவுக்கு தாவியிருக்கிறது. இத்தனைக்கும் வேறு எந்த கட்சியை விடவும் காங்கிரஸ் கட்சிக்குதான் அதிக சீட்டை திமுக ஒதுக்கியிருந்தது. இது போக ஒரு ராஜ்யசபா எம்பி பதவியையும் கொடுத்திருந்தது. இப்படி இருந்தும் தவெக பக்கம் காங்கிரஸ் போனதால் திமுக கடும் அதிர்ச்சியைடந்திருக்கிறது.

காங்கிரஸ் மீதான அதிருப்தி
தேர்தல் சமயங்களில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசியிருந்த விஷயம் ஏற்கெனவே திமுகவை டென்ஷன் ஆக்கியிருந்தது. இதுபோக.. இப்போது கூட்டணி தாவியதால், காங்கிரஸ் மீதான அதிருப்தி திமுகவுக்கு அதிகரித்திருக்கிறது.
சூழல் இப்படி இருக்கையில் நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தவும், இது குறித்து விவாதிக்கவும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை இன்று காங்கிரஸ் நடத்துகிறது. இதில் திமுக பங்கேற்குமா? என்று கேள்விகள் எழுந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று விளக்கிய திமுக, ராகுல் காந்தி மீது சரமாரியாக விமர்சனங்களை அடுக்கியிருந்தது.
ராகுல் மீது விமர்சனம்
"திமுக கூட்டணியில் இருந்துகொண்டே இதற்கு குழிபறிக்கும் செயல்களை ராகுல் செய்தார். அதைப் பச்சையாக வெளிப்படையாகவே செய்தார். இதைச் சகித்துக் கொள்ளும் தேவை எங்களுக்கு இல்லை. தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கிறது.
தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்பி ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது" என்று திமுக கடும் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தது.
இந்தியா கூட்டணி
இது ஒருபுறம் எனில், மறுபுறம் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தியை இந்தியா கூட்டணி தலைவர்களான பிரனாயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் விமர்சிக்கும் வகையில் திமுக டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அருகில் பேனர்களை வைத்திருக்கிறது.
திமுகவின் சம்பவம்
இந்த கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்தான் இன்று மதியம் 12 மணிக்கு இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இப்படி இருக்கையில் திமுக தரப்பில் பேனர்களை வைக்கப்பட்டதை கொஞ்சம் கூட காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications