மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?.. யாருக்கு தெரியும்.. கையை விரித்த மத்திய அரசு!
டெல்லி: தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ.1,264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

மதுரை எய்ம்ஸ்
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக ஜப்பான் நிறுவனம் மற்றும் மத்திய அரசு இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு, மாநிலத்தையும், மாநிலம், மத்திய அரசையும் குற்றம்சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஜெயிப்பதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒரு காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

தேர்தல் பிரசாரம்
ஏனெனில் தற்போது சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லை மக்களிடம் காட்டியே வாக்கு கேட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதேபோல் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைவர்களின் பிரசார பொருளாக மதுரை எய்ம்ஸ் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.டி.ஐ.யில் கேள்வி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(ஆர்.டி.ஐ) கீழ் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து விவரங்கள் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ' திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை.இதனை கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

எதுவும் தெரியாது
எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை' என்று கூறியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ்நாட்டு மக்கள் மத்திய அரசின் இந்த பொறுப்பற்ற பதிலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications