டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்றம் நடக்கும்போதே எனக்கு அமலாக்கத்துறை சம்மன்: திடுக் தகவலை சொன்ன மல்லிகார்ஜுன கார்கே

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தமக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக ராஜ்யசபாவில் மூத்த காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சோனியா, ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். நேஷனல் ஹெரால்டு பங்குகளை யங் இந்தியா நிறுவனத்துக்கு சோனியா, ராகுல் மாற்றினர். இப்படி மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.

ED issues summon to Senior Cong. leader Mallikarjun Kharge

இது தொடர்பாகவே சோனியா, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்குப் பின்னர் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. மேலும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம், யங் இந்தியா அலுவலகம் ஆகியவற்றுக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அத்துடன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், சோனியா காந்தி வீடு ஆகியவை முன்பாகவும் பெரும் எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பதற்றமடைந்தனர். இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் கர்நாடகா பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தியும் டெல்லி திரும்பினார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், பிரதமர் மோடியின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்; எங்களை அமைதிப்படுத்த அழுத்தங்கள், நெருக்கடி தருகின்றனர்; அதற்காக அமைதியாக இருந்துவிடமாட்டோம் என்றார்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று ஆஜராக வேண்டும் என எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். நான் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே.. நாடாளுமன்றம் நடைபெறும் போது இப்படி சம்மன் அனுப்புவது சரியான நடைமுறையா? சோனியா காந்தி, ராகுல் காந்தி வீட்டை போலீசார் முற்றுகையிட்டு கெரோ செய்வது எப்படி சரியாக இருக்க முடியும்? இதற்கெல்லாம் நாங்கள் அச்சப்படவில்லை.. தொடர்ந்து போராடுவோம் என்றார்.

English summary
ED issued summon to Senior Cong. leader Mallikarjun Kharge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X