10 ஆண்டுகளில் இல்லாத அளவு.. 62% அளவுக்கு ராக்கெட் போல உயர்ந்த சமையல் எண்ணை விலை.. மக்கள் திண்டாட்டம்
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமையல் எண்ணெய் விலை இப்போது கடுமையாக உயர்ந்துள்ளது.
வனஸ்பதி, சோயா, பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எண்ணெய் விலைகளும் உயர்ந்ததன் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இப்போது 62 சதவீதம் அளவிற்கு விலையேற்றம் காணப்படுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து விட்ட நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது குறித்து உற்பத்தியாளர்களுடன், ஒரு மத்திய அரசு ஆலோசனை நடத்தி உள்ளது.

ஆலோசனை கூட்டம்
மதிய உணவு துறைச் செயலாளர் சுதான்சு பாண்டே தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்தியாவின் தேவைக்கேற்ப எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லை எனக்கூறினார்.

இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியா
நமது நாட்டின் எண்ணை தேவையில், 60 சதவீதம் இறக்குமதி மூலமாக ஈடுகட்டப்படுகிறது. இறக்குமதியை நாம் அதிகம் சார்ந்து உள்ளோம். எனவே, சர்வதேச சந்தையில் எண்ணை விலை உயரும்போது இந்தியாவிலும் அதன் விலை உயரும் சூழல் ஏற்படுவதாக கூறிய உணவு துறை செயலாளர், அவற்றின் விலையை குறைக்க குறுகிய கால அளவில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.

உடனடி நடவடிக்கை
நிலையை உடனடியாக சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்குமாறும் உற்பத்தியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்திலிருந்தும், உணவுத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில், பங்கேற்றனர்.ஒரு பக்கம் பலநகரங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. சமையல் எண்ணெய் விலையும் 62 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஆக மொத்தம் உங்களுக்கு தெரியாமல் அல்லது நீங்கள் உணராமல் உங்களது பாக்கெட்டில் இருந்து கணிசமான ரூபாய் வெளியே உருவப்பட்டு வருகிறது .

கசியும் பணம்
கொரோனா பரவலால், நாடும், நாட்டு மக்களும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த காலகட்டத்தில், அரசு நமக்கு பணம் தருமா என்று எதிர்பார்க்கும் நேரத்தில், நாம் பணத்தை இப்படியான விலைவாசி உயர்வுகளால் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சாமானியர்கள் நிலைமை மிகவும் மோசமாக மாறிக் கொண்டுள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications