டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஹலோ மேன்.. இது என் வழி!" நடுவே நின்ற நபர்.. பின்னால் இருந்து ஓடி வந்த யானை! அடுத்து செம ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: வழியில் நின்று கொண்டு இருந்த நபரை நோக்கி வேகமாக வந்த யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Recommended Video

    ஹலோ மேன்.. இது என் வழி! நடுவே நின்ற நபர்.. பின்னால் இருந்து ஓடி வந்த யானை! அடுத்து செம ட்விஸ்ட்

    இந்தியாவில் இருக்கும் முக்கியமான விலங்குகளில் ஒன்று யானைகள். அடித்து அசைந்து ஒய்யாரமாக வரும் யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது.

    காட்டில், வன காப்பகத்தில் என எங்கு இருந்தாலும் சரி யானை எப்போதும் தங்கள் விளையாட்டுத் தனத்தைக் குறைத்துக் கொள்ளாது.

    "ரொம்ப குளிருது!" காப்பாளரை கட்டி அணைத்துக் கொண்ட யானைக் குட்டி! க்யூட் வீடியோ

    யானைகள்

    யானைகள்

    பொதுவாக யானைகள் எப்போதும் குறிப்பிட்ட வழித்தடத்தைப் பின்பற்றியே பயணிக்கும். அதாவது யானைகள் எப்போதும் சராசரியாக 500 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட காடுகளைப் பயன்படுத்துமாம். யானைகளின் வாழ்விடங்கள் பல்வேறு வனப்பகுதிகளைச் சேர்த்து இருக்கும். இவை தான் யானையின் வாழ்விடங்கள் என அழைக்கப்படுகிறது. சீசனுக்கு ஏற்ப யானைகள் தங்கள் வாழிடங்களுக்கு பயணிக்கும்.

     வழித்தடங்கள்

    வழித்தடங்கள்

    யானைகள் Traditional Migrating Path என்று அழைக்கப்படும் பாரம்பரியமான வலசைப் பாதைகள் ) மூலமாகவே பயணிக்கும். இப்போதெல்லாம் காடுகளும் கூட ஆக்கிரமிக்கப்படுவதால் யானையின் பயணிக்கும் வழித்தடங்களும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து சேதப்படுத்தும் செய்திகளை நாம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. இதைத் தடுக்க அரசும் நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

     ஓடி வந்த யானை

    ஓடி வந்த யானை

    இதனிடையே தனது வழியில் நின்று கொண்டு இருந்த நபரை நகர்ந்து போக வைக்க யானை செய்த செயலின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் நபர் ஒருவர் அலட்சியமாக சிகரெட் பிடித்துக் கொண்டு நிற்கிறார். சில நொடிகளிலேயே பின்னால் இருந்து யானை ஒன்று மிக வேகமாக மனிதரை நோக்கி ஒடி வருகிறது. அதைப் பார்க்கும் போது, அடுத்து அந்த நபருக்கு என்ன தான் நடக்கும் என்ற பதற்றம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.

     ஹலோ மேன் தள்ளிப்போ

    ஹலோ மேன் தள்ளிப்போ

    மிக வேகமாக ஓடி வந்த அந்த யானை, அவர் அருகே வந்ததாலும், தனது வலது காலை கொண்டு மண்ணை அந்த நபரை நோக்கி எறிகிறது. மண் வருவதைக் கவனித்த உடன், அந்த நபர் எடுத்தார் பாருங்க ஒரு ஓட்டத்தை! சில அடிகள் ஓடி வந்த பின்னர் தான் யானை தன் பின்னால் இருந்ததையே அவர் பார்க்கிறார். அதன் பின்னர் அந்த யானை மீண்டும் ஒய்யாரமாகத் தனது பாதையில் செல்ல தொடங்குகிறது.

     பொறுப்பும் பொறுமையும்

    பொறுப்பும் பொறுமையும்

    வெறும் 22 நொடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. வழியில் நின்று கொண்டு இருக்கும் நபரை இதை விட பொறுப்பாகவும் பொறுமையாகவும் நகர்ந்து போகும்படி சொல்ல யாராலும் முடியாது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில அந்த நபரின் ரிஆக்ஷனை கிண்டல் செய்து வருகின்றனர்.

     நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    இந்த வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், யானை தனது வழியில் இருந்த நபரைப் பொறுமையாகத் தள்ளிப் போகச் சொல்லும் இந்த வீடியோவும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

    English summary
    Elephant askes a man to make way for him: (வழியில் நின்ற நபரை தள்ளிப் போகச் சொல்லும் யானை க்யூட் வீடியோ) Man Elephant conflict latest video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X