ஒரு டுவிட்டுக்கு ரூ.2 கோடி வாங்கினேனா?. . முகமது ஜூபைர் பரபர பதில். .
புதுடெல்லி: சர்சைக்குரிய வகையில் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டதால் கைதாகி தற்போது திகார் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ள முகம்மது ஜூபைர், ஒரு டுவிட்டுக்கு ரூ.2 கோடி வாங்கினேனா என்று தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கும் பதில் தெரிவித்துள்ளார்.
செய்திகளின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக இயங்கி வருகிறது 'ஆல்ட் நியூஸ்' எனப்படும் செய்தி தளம். இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜூபைர் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முகமது ஜூபைர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில், கருத்து ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் வெளியிட்டிருந்த கருத்து சிறிது நேரத்த்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரது கருத்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக டெல்லி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசாரும் முகமது ஜூபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து போலீசார் முகமது ஜூபைரை டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.

7 வழக்குகள்
இதற்கிடையே டெல்லி போலீசில் மட்டுமின்றி முகமது ஜூபைர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக உத்தரபிரதேசத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. டெல்லி, உத்தரபிரதேசம் என 2 மாநிலங்களிலும் முகமது ஜூபைர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது ஒருபுறம் இருக்க, உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது ஜூபைர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சிறையில் இருந்து வெளிவந்தார்
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், முகமது ஜூபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். எனினும் சீதாபூர் மாவட்டத்தில் பதியப்பட்ட வழக்குக்கு மட்டுமே ஜாமீன் கிடைத்ததாலும், மற்ற வழக்குகள் இருந்ததால் முகமது ஜூபைர் தொடர்ந்து சிறையிலேயே இருந்தார். இதையடுத்து, தன் மீதான அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்கக்கோரி முகம்மது ஜூபைர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முகமது ஜூபைர் மீது பதியப்பட்ட 7 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, முகமது ஜூபைர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

முகம்மது ஜூபைர் பதில்
இந்த நிலையில், திகார் சிறையில் இருந்து வெளிவந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், முகம்மது ஜூபைர் தனது மவுனத்தை கலைத்துள்ளார். இது தொடர்பாக முகம்மது ஜூபைர் கூறுகையில், 'மாண்புமிகு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காததால் நான் வழக்கம் போல எனது பணியை செய்வேன்'என்றார். ஒரு ட்விட் பதிவுக்கு ரூ.2 கோடி பணம் பெறுவதாக தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த முகம்மது ஜூபைர், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான், இப்படி ஒரு குற்றச்சாட்டை நான் கேள்விப்படுகிறேன். எந்த விசாரணை முகமையும் இதுபோன்ற எந்த கேள்வியையும் என்னிடம் கேட்கவில்லை' என்றார்.

குற்றச்சாட்டு
முன்னதாக உத்தர பிரதேச நீதிமன்றத்தில் முகம்மது ஜூபைருக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது, அம்மாநிலத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முகம்மது ஜூபைர் தீய நோக்குடன் வெளியிடும் டுவிட் பதிவுகள் மூலம் பணம் பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications