ஓமிக்ரானை விட ஆபத்தானதா XBB வைரஸ்? இணையத்தில் பரவும் பொய்கள்.. மத்திய சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரானை விட ஆபத்தான XBB வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இணையத்தில் குறிப்பாக வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும் இதற்கு மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவை மக்கள் மெல்ல மெல்ல மறக்க தொடங்கியிருக்கும் சூழலில் தற்போது மீண்டும் பூதாகரமாக மாறி வருகிறது கொரோனாவின் புதிய வகை மாறுபாடு.

சீனாவை நடுங்க வைத்துக் கொண்டு இருக்கும் பிஎப் 7 என்ற வைரஸ் மாறுபாடானது அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

மீண்டும் ஒரு கொரோனா அலை

மீண்டும் ஒரு கொரோனா அலை

கொரோனா பாதிப்புகளால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் சுடுகாடுகளில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய பெரும் கூட்டமே நிற்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சீனாவை உலுக்கிக் கொண்டு இருக்கும் வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருப்பதால் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன.

கொரோனாவின் புதிய வகை மாறுபாடு

கொரோனாவின் புதிய வகை மாறுபாடு

ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளில் பரவிய இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இந்தியாவில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச பயணிகளுக்கு பரிசோதனை செய்வது முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு விடுத்துள்ளன. கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையில் மக்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில் தற்போது கொரோனாவின் புதிய வகை மாறுபாடு பரவுவதாக வெளியாகும் தகவல் மக்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து மடங்கு அதிக ஆபத்து

ஐந்து மடங்கு அதிக ஆபத்து

இதற்கிடையே ஒமிக்ரான் வகை கொரோனாவின் மாறுபாடு வகையான XBB என்ற கொரோனா பரவுவதாகவும் இந்த வைரஸ் அதிக உயிரிழப்பு விகிதத்தையும் ஐந்து மடங்கு அதிக ஆபத்து கொண்டது எனவும் வாட்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்த வைரஸ் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் எதுவும் இன்றி பாதிப்பதாகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி, கழுத்து வலி, மேல் முதுகு வலி, நிம்மோனியா, ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கோவிட் ஒமிக்ரானை விட 5 மடங்கு வீரியம் மிக்கது. மிகத் தீவிரமான பாதிப்புகளை குறுகிய காலத்திலேயே எடுத்து விடும். சில நேரங்களில் குறிப்பிடும் படியாக எந்த ஒரு அறிகுறியும் இருக்காது. எனவே மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நேரடியாக நுரையீரலை இந்த வைரஸ்கள் தாக்கும். அதுவும் குறுகிய காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மூக்கு வழியாக எடுக்கப்படும் பரிசோதனையில் இதை கண்டறிய முடியாது. இந்த வைரஸிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்துங்கள் என்ற வாசகங்களுடன் ஒரு மெசேஜ் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதை உண்மை என நம்பி பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் தகவல் பொய்யானது

வாட்ஸ் அப் தகவல் பொய்யானது

இந்த நிலையில், இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை கூறுகையில், ''XBB வேரியண்ட் குறித்த வாட்ஸ் அப் தகவல் பொய்யானது. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் யாருக்கும் பகிரவும் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. ஒமிக்ரானை விட XBB கொடியது என்று தற்போதைய தரவுகள் எதுவும் காட்டவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+