• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஓமிக்ரான் அறிகுறிகள் 20 டைப் இருக்குதாம்! தலைவலி to டேஸ்ட் இன்மை.. லிஸ்ட் போட்ட விஞ்ஞானிகள்.. உஷார்

Google Oneindia Tamil News

டெல்லி: ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு லேசானது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் இப்போது விஞ்ஞானிகள் தங்கள் கருத்திலிருந்து பின் வாங்கத் தொடங்கியுள்ளனர். டெல்டாவை விட லேசானதுதானே தவிர ஓமிக்ரான் ஏகப்பட்ட பக்க விளைவுகளையும், நோய் அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

  Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil

  உடம்பில் பெரும் சோர்வு போன்றவை ஓமிக்ரானுக்கான பொதுவான அறிகுறி என்றபோதிலும், வேறு சில அறிகுறிகளும் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

  பலரும் சாதாரண காய்ச்சல் என்று நினைத்து மெத்தனமாக இருப்பதால் பரிசோதனை செய்து கொரோனாவா என்று அறிய முற்படாத நிலை இந்தியாவில் உள்ளது. ஆனால் 3 நாட்களுக்கு மேலும் காய்ச்சல் இருந்தால் தயவு செய்து மருத்துவரை பார்த்து உரிய துணை மருந்துகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

  ஈ-காமர்ஸ் நிறுவனமா ஸ்னாப்டீல் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி குணால் பாஹ்லுக்கும் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் வேரியண்ட் தாக்கியுள்ளதாம். ஆனால், அது லேசுபட்ட அறிகுறி இல்லை. மக்களே ஜாக்கிரதையாக இருங்கள் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார். சரி அப்படி என்ன வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதோ ஒரு எச்சரிக்கை பதிவு.

  இமேஜ் முக்கியமில்ல! ரஜினி தந்த அட்வைஸ்.. கடைசி வரை கஷ்டப்பட்ட ஐஸ்வர்யா.. தனுஷுக்கு இது பெரிய ரிஸ்க் இமேஜ் முக்கியமில்ல! ரஜினி தந்த அட்வைஸ்.. கடைசி வரை கஷ்டப்பட்ட ஐஸ்வர்யா.. தனுஷுக்கு இது பெரிய ரிஸ்க்

  20 வகை ஓமிக்ரான் அறிகுறிகள்

  20 வகை ஓமிக்ரான் அறிகுறிகள்

  1.தலைவலி

  2. மூக்கு ஒழுகுதல்
  3. சோர்வு
  4. தும்மல்
  5. தொண்டை புண்
  6. தொடர் இருமல்
  7. கரகரப்பான குரல்
  8. குளிர் அல்லது நடுக்கம்
  9.காய்ச்சல்
  10.தலைச்சுற்றல்
  11.மூளை யோசிப்பு மந்தநிலை
  12. வாசனை மாற்றம்
  13. கண் வலி
  14.கடுமையான தசை வலி
  15. பசியின்மை
  16. வாசனை இல்லாமை
  17.நெஞ்சு வலி
  18. சுரப்பிகளின் வீக்கம்
  19. பலவீனம்
  20.தோல் பகுதியில் தடிப்புகள்

  இந்த அறிகுறிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

  இந்த அறிகுறிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

  சுகாதார நிபுணர்களின் கணிப்புப்படி, ஓமிக்ரானின் அறிகுறிகள் டெல்டாவை விட வேகமாக இருக்கிறது. அதாவது வைரஸ் பரவிய பிறகு சீக்கிரமே உடலுக்கு அறிகுறியை காட்டிவிடும். டெல்டா கிட்டத்தட்ட 1 வாரம் அவகாசம் எடுத்தது. ஆனால், ஓமிக்ரான் நோயாளிகளில், நோய்த்தொற்று ஏற்பட்ட 2 முதல் 5 நாட்களுக்குள் அறிகுறிகளால் அவதிப்படுகிறார்கள்.

  5 நாட்கள் கண்டிப்பாக அறிகுறி உள்ளது

  5 நாட்கள் கண்டிப்பாக அறிகுறி உள்ளது

  பிரிட்டிஷ் தொற்றுநோயியல் நிபுணர் டிம் ஸ்பெக்டரின் கருத்துப்படி, ஓமிக்ரானின் ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் சராசரியாக 5 நாட்களுக்கு நீடிக்கும். இருப்பினும், கட்டுப்பாடுகள், சமூக விலகல் மற்றும் முகமூடி அணிவது ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, இதன் காரணமாக, காய்ச்சல் பாதிப்புகளும் குறைந்துள்ளன.

  டிம் ஸ்பெக்டர் கூறுகையில், ஓமிக்ரானின் அறிகுறிகள் டெல்டாவை விட குறைவான நாட்கள் நீடிக்கும். 5 நாட்களுக்குப் பிறகு சோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால்,
  5 நாட்களில் அறிகுறியும் நின்றுவிடும். அதாவது, அவை எவ்வளவு வேகமாகத் தோன்றுகிறதோ, அவ்வளவு வேகமாக விட்டுச் செல்கின்றன. பெரும்பாலான மக்களில், ஓமிக்ரானின் அறிகுறிகள் 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். தடுப்பூசி போடப்பட்டவர்களில் அதன் அறிகுறிகள் லேசானவையாக உள்ளன. கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறாதவர்களுக்கு ஓமிக்ரான் அறிகுறி மிகவும் கடுமையானதாக உள்ளது.

  நோய் எதிர்ப்பு சக்தி

  நோய் எதிர்ப்பு சக்தி

  ஓமிக்ரானில் இருந்து மீண்டு வருபவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் நன்றாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலத்திற்கு மக்களின் உடலில் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான பேராசிரியர் பால் ஹன்டர், ஓமிக்ரான் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி அந்த வேரியண்ட்டுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  தடுப்பூசிதான் முக்கியம்

  தடுப்பூசிதான் முக்கியம்

  அதே நேரத்தில், லண்டன் இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, அதிக அளவு டி செல்கள் கோவிட் தொற்றுக்கு எதிராகப் பாதுகாக்கும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு, ஆனால் இது ஒரு வகையான பாதுகாப்பு மட்டுமே மற்றும் அதை மட்டும் நம்ப முடியாது. கொரோனாலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி தடுப்பூசி அளவுகள் மற்றும் பூஸ்டர்களை செலுத்துவதுதான் என்கிறார்கள்.

  நீண்டகால கொரோனா அறிகுறிகள் என்ன?

  நீண்டகால கொரோனா அறிகுறிகள் என்ன?

  கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகும் ஓமிக்ரான் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. 12 வாரங்கள் வரை கூட சிலருக்கு அறிகுறி இருந்துள்ளது.

  தலைவலி
  சோர்வு
  தூக்கக் கலக்கம்
  செரிமான சிரமங்கள்
  வயிற்று வலி
  இவைதான் நோயாளிகள் குறிப்பிடும் அறிகுறிகளாகும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது என்று மக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  English summary
  Omicron symptoms in Tamil: Although it was initially said that the symptoms of the Omicron virus was mild, scientists are now beginning to back away from their idea. Experts believe that Omicron, which is milder than Delta, causes a number of side effects and symptoms.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X