5 மாநில தேர்தல்: பிரசார பேரணி, பொது கூட்டம் நடத்த 31-ந்தேதி வரை தடை.. சில தளர்வுகளும் அறிவிப்பு
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பேரணி, பொது கூட்டங்கள் நடத்துவதற்கான தடையை 31-ந்தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல்
மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி, மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட உள்ளது. தற்போது நாட்டில் கொரோனா உச்சத்தில் உள்ளதால் கடுமையான கொரோனா தடுப்பு விதிகளுடன் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
இந்த 5 மாநிலங்ககளிலும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு இருந்தன. வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. பிரசாரம், பேரணிகள், பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. முதலில் ஜனவரி 15 ஆம் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்னர் ஜனவரி 22-ம் தேதி(இன்று) வரை தடை நீட்டிக்கப்பட்டது.

ஜனவரி 31 வரை நீட்டிப்பு
இன்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலியில் ஆலோசனை நடத்தியது. இதில் மேலும் பிரசாரம் செய்ய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? தளர்வுகள் கொடுக்கலாமா? என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பிரசாரம், பேரணிகள், பொது கூட்டம் நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் இதுதான்
அதே வேளையில் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க ஏற்கனவே 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில், தற்போது 10 பேர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்யலாம்
என அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தேர்தல் தொடர்புடைய கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளுக்குதான் இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications