மும்பை தாக்குதலின் போது.. முன்னின்று போராடிய.. என்எஸ்ஜி முன்னாள் இயக்குநர் ஜெனரால் கொரோனாவால் பலி
'டெல்லி: மும்பை தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக கவுன்டர் தாக்குதலை முன்னின்று நடத்திய தேசியப் பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநர் ஜெனரால் ஜே.கே தத் கொரோனாவால் உயிரிழந்தார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மோசமாக உள்ளது. இந்தாண்டு கொரோனா உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, கவுன்டர் தாக்குதலை முன்னின்று நடத்தியவர் அப்போது தேசியப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனராலாக இருந்த ஜே.கே தத். இவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் டெல்லியிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

1971ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான ஜே.கே தத், கடந்த 2006 முதல் 2009 வரை தேசியப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரால் இருந்தவர். அப்போது தான் மும்பையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான கவுன்டர் தாக்குதலை அவர் முன்னின்று நடத்தினார். ஜே.கே தத் சிபிஐ மற்றும் சிஐஎஸ்டி உள்ளிட்ட படைகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications