டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொருளாதார சரிவு.. பிற மாநில தொழிலாளர்களுக்கு உதவும் கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதார சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு போதிய உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து இருக்கிறது.

கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியாவின் பொருளாதரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது .

Garib Kalyan Rojgar Abhiyan will people amid Economic depression

இந்த மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக பிறமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தில் வேலையை இழந்து இவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு சென்று இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்களுக்கு போதிய உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து இருக்கிறது.

இந்த திட்டம் மொத்தம் 125 நாட்களுக்கு செயல்படும். பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கனட் , ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 25 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவார்கள். மொத்தம் 116 மாவட்டங்களில் உள்ள மக்கள் இதனால் பயன்பெறுவார்கள் .

இதனால் இந்த மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மொத்தமாக 25 விதமான பணிகளை இவர்கள் செய்யலாம். மொத்தம் 50 ஆயிரம் கோடி ரூபாய் இதில் செலவு செய்யப்பட்டுள்ளது. MNREGA மூலம் இவர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்படும். தினமும் இவர்களுக்கு 202 ரூபாய் வழங்கப்படும்.

பி.டி.அரசக்குமார் வரிசையில் மேலும் ஒருவர்... பாஜகவில் இருந்து இழுக்க திமுக முயற்சி பி.டி.அரசக்குமார் வரிசையில் மேலும் ஒருவர்... பாஜகவில் இருந்து இழுக்க திமுக முயற்சி

ஏற்கனவே மத்திய அரசிடம் இதற்கான பட்டியல் உள்ளது. ஏற்கனவே வெளிமாநிலத்தில் பணியாற்றி திரும்பி சொந்த ஊருக்கு வந்து இருக்கும் பணியாளர்களின் பட்டியல் அரசிடம் இருக்கிறது. இந்த பட்டியலை வைத்து பணியாளர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, கிராம மற்றும் நகர நிர்வாகம் மூலம் வருபவர்களுக்கு பணிகள் வழங்கப்படும்.

Garib Kalyan Rojgar Abhiyan will people amid Economic depression

பணியாளர்களின் விருப்பம் மற்றும் திறமைப்பு ஏற்றபடி இவர்களுக்கு வேலைகள் வழங்கப்படும். மொத்தம் 25 விதமான பணிகள் இவர்களுக்கு வழங்கப்படும். கிராமப்புற வீட்டுவசதி, தோட்டக்கலை, தோட்டம், நீர் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம், அங்கன்வாடி, பஞ்சாயத்து முன்னேற்றம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் ஆகியவை கிடைக்கும்.

பின் வரும் பணிகள் இவர்களுக்கு வழங்கப்படும்:

  • சமூக துப்புரவு பணிகள்
  • கிராம பஞ்சாயத்து பணிகள்
  • வேலை நிதி ஆணையம் நிதியம் கீழ் செய்யப்படும் பணிகள்
  • தேசிய நெடுஞ்சாலை பணிகள்
  • நீர் பாதுகாப்பு மற்றும் நீர் அறுவடை பணிகள்
  • கிணறுகள் அமைத்தல்
  • நடவு பணிகள்
  • தோட்டக்கலை வேலை
  • அங்கன்வாடி மையத்தின் பணி
  • பிரதான் மந்திரி கிராம அவாஸ் பணி
  • பிரதான் மந்திரி கிராமின் அவாஸ் யோஜனாவின் பணி
  • கிராமப்புற சாலை மற்றும் எல்லை சாலை பணிகள்
  • இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படுகிறது
  • ஷியாமா பிரசாத் முகர்ஜி நகர மிஷன்
  • பாரத் நெட்டின் கீழ் ஃபைபர் ஆப்டிகல் கேபிளிங் வேலை
  • பி.எம்.குசம் யோஜனா வேலை
  • நீர் வாழ்க்கை திட்டத்தின் கீழ் பணிகள் செய்யப்பட்டன
  • பிரதான் மந்திரி உர்ஜா கங்கா திட்டம்
  • கிருஷி விஜியன் கேந்திராவின் கீழ் வாழ்வாதார பயிற்சி
  • மாவட்ட கனிம நிதியத்தின் கீழ் செயல்படும் திட்டம்
  • திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை கீழ் செயல்படும் திட்டம்
  • பண்ணை குளம் திட்டம் வேலை
  • விலங்கு கொட்டகை கட்டுமானம்
  • செம்மறி ஆடு / ஆடுக்கு கொட்டகை அமைத்தல்
  • கோழிப்பண்ணைக்கு கொட்டகை கட்டுமானம்
  • மண்புழு உரம் தயாரிக்கும் அலகு தயாரித்தல் ஆகிய பணிகள் வழங்கப்படும்.
English summary
Garib Kalyan Rojgar Abhiyan will people amid Economic depression.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X