Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுவரை வெளிவராத 2011 உலகக்கோப்பை ரகசியம்.. இறுதிப்போட்டியில் தோனி சொன்ன விசயம்! கம்பீர் ஓபன் டாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகக்கோப்பை 2011 தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தாலும், இதுவரை வெளியாத புதிய தகவலை இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் தெரிவித்து உள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனியுடன் ஜோடி அமைத்து விளையாடியபோது அவர் தன்னிடம் தெரிவித்த தகவலை கம்பீர் பகிர்ந்து உள்ளார்.

தற்போதைய இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம், இந்திய அணிக்கு கடந்த 20 ஆண்டுகளில் மிகச்சிறந்த ஆண்டு எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு 2011 என்று சொல்வார்கள்.

காரணம் கபித் தேவ் தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி அந்த ஆண்டில் ஐசிசி உலகக்கோப்பையை வென்றது.

 மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்

12 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இந்திய அணி அந்த உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற தருணங்களை இன்று வரை நினைவுகூர்ந்து பேசி வருகிறோம். அந்த நாளில் கவுதம் கம்பீரின் அசத்தலான பேட்டிங், தோனியின் மரண பினிஷிங், ஜாஹிர் கானின் கிளாசான பந்து வீச்சு, யுவராஜ் சிங்கின் ஆல்ரவுண்ட் அசத்தல், சச்சின் டெண்டுல்கரின் ஃபேர்வெல் என அனைத்தும் நம் கண்முன் வந்து போகும்.

ஷாக் கொடுத்த இந்தியா

ஷாக் கொடுத்த இந்தியா

இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் சேவாக் 2 வது பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களிலேயே மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணியினர் மற்றும் இந்திய ரசிகர்களிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கவுதம் கம்பீர் - கோலி ஜோடி

கவுதம் கம்பீர் - கோலி ஜோடி

அப்போது இளம் வீரராக இருந்த விராட் கோலியுடன் 3 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஆட்டத் தொடங்கினார் கவுதம் கம்பீர். அந்த ஜோடி 83 ரன்களை சேர்த்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. விராட் கோலியும் 35 ரன்களில் திலகரத்னே தில்சான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந்தார் கவுதம் கம்பீர்.

தோனி - கம்பீர் ஜோடி

தோனி - கம்பீர் ஜோடி


தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர், தோனியுடன் ஜோடி சேர்ந்து 4 விக்கெட்டுக்கு 109 ரன்களை சேர்க்க இந்திய அணியின் வெற்றி ஓரளவுக்கு உறுதியானது. அசத்தலான மற்றும் நிலையான பேட்டிங்கின் காரணமாக 90 ரன்களை கடந்த கவுதம் கம்பீர் உலகக்கோப்பை உறுதிப் போட்டியில் நிச்சயம் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சதத்தை தவறவிட்ட கம்பீர்

சதத்தை தவறவிட்ட கம்பீர்

ஆனால், அவர் 97 ரன்கள் எடுத்த நிலையில் திசாரா பெரரா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறியது அனைவரும் ஏமாற்றம் அடைந்தார்கள். அதை தொடர்ந்து தோனி, யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்து 49 வது ஓவரில் 4 விக்கெட் இழந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். அவர் 79 பந்துகளில் 91 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

 காதில் தோனி சொன்ன விசயம்

காதில் தோனி சொன்ன விசயம்

இதுகுறித்து தற்போது பேசி இருக்கும் கவுதம் கம்பீர், "தோனி எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். நான் சதம் அடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். நான் எப்போது சதம் அடிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். போட்டியின்போது அவசரப்பட வேண்டாம். நேரம் எடுத்துக்கொண்டு சதம் விளாசுங்கள் என்று அவர் என்னிடம் கூறினார்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+