டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மண்ணெண்ணெய் மானியத்திற்கு என்ட் கார்டு போட்ட மத்திய அரசு! சந்தை விலையில்தான் ஏழைகளும் வாங்க வேண்டும்

Google Oneindia Tamil News

டெல்லி: படிப்படியாக, மண்ணெண்ணெய் விலையை ஏற்றப்பட்டுக் கொண்டே வந்த நிலையில், இப்போது மண்ணெண்ணைக்கான மானியத்தை முற்றிலும் நிறுத்தியுள்ளது மத்திய அரசு.

பொது வினியோகக் கடைகளை அகற்ற மத்திய அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஏழைகளின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான, மண்ணெண்ணை மீதான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மண்ணெண்ணைக்கு மானியம் வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

நல்ல வாய்ப்பு.. என் அப்படி ஒரு முடிவெடுத்தார் ஸ்டாலின்.. எழும் விமர்சனங்கள்! நல்ல வாய்ப்பு.. என் அப்படி ஒரு முடிவெடுத்தார் ஸ்டாலின்.. எழும் விமர்சனங்கள்!

மானியம் குறைப்பு

மானியம் குறைப்பு

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டில், மண்ணெண்ணெய் மானியம் ரூ .2,677.32 கோடியாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டில் ரூ .4,058 கோடியாக இருந்தது என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அரசு வழங்கும், மானியத் தொகை வெகுவாக குறைந்துவிட்டது. மானிய சுமையை குறைக்க ஒவ்வொரு இரு வாரங்களுக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் விலையை ஒரு லிட்டருக்கு 25 பைசா உயர்த்த அரசு கடந்த 2016ல் அனுமதி அளித்ததது.

சந்தை விலை

சந்தை விலை

இதன்படி கடந்த 4 ஆண்டுகளில் மண்ணெண்ணெய் விலை மொத்தமாக ரூ.23.8 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மண்ணெண்ணெய்க்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பட்ஜெட்டில் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்போது சந்தை விலையில்தான் ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்களும் மண்ணெண்ணை வாங்கியாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

மண்ணெண்ணெய் விலை உயர்வு ஏறக்குறைய, ஏழைகளை தவிர, யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று சொல்லலாம். எதிர்க்கட்சிகளும் இது பற்றி எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து மட்டுமே எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தபடி உள்ளன.

எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள்

எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களால் மண்ணெண்ணெய் தங்களது சமையல் மற்றும் விளக்கேற்றுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஏழைகள் வீடுகளுக்கு மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தின்கீழ், 8 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், மண்ணெண்ணெய் நுகர்வு குறைந்துள்ளது.

மண்ணெண்ணை மானியம்

மண்ணெண்ணை மானியம்

2010ம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்துவதிலிருந்து மத்திய அரசு விலகிக் கொண்டது. 2014ம் ஆண்டு அக்டோபர் முதல் டீசல் விலைகளை கட்டுப்படுத்துவதையும் மத்திய அரசு கைவிட்டு விட்டது. அதாவது இந்த இரண்டு எரிபொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டது. சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மட்டுமே மட்டுமே மானியம் தொடர்ந்தது. இப்போது மண்ணெண்ணை மானியத்திற்கும் என்டு கார்டு போட்டுள்ளது மத்திய அரசு. இதனால் ஏழைகள் அதிக செலவிட்டு அவற்றை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எல்பிஜிக்கு 2021-22 ஆம் ஆண்டில் ரூ .12,480 கோடி மானியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. முந்தைய நிதியாண்டுக்கு ரூ .25,520.79 கோடி ஒதுக்கப்பட்டது. எனவே எல்பிஜி மானியமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The government has eliminated subsidy on poor man's fuel kerosene through small fortnightly price increases and the fuel sold through the public distribution system (PDS) is now priced at market rates. The Union Budget for 2021-22 makes no provision for payment of subsidy on kerosene in the fiscal year beginning April, according to budget documents tabled in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X