டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நற்செய்தி... கடந்த ஒரு வாரமாக... கொரோனா தினசரி உயிரிழப்பு... 300--க்கும் கீழ் பதிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 7 நாட்களில் தினமும் 300-க்கும் குறைவான கொரோனா இறப்புகளே பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒட்டு மொத்த பாதிப்பில் பாசிட்டிவ் கேஸ்கள் வெறும் 2.47% மட்டுமே உள்ளதாகவும், குணமடைந்தவர்கள் விகிதம் 96.08 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,036 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 1,02,86,710 ஆக அதிகரித்துள்ளது .மேலும் 256 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

இந்தியாவுக்கு ஆறுதல்

இந்தியாவுக்கு ஆறுதல்

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா வைரசும் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்புகள் சராசரியாக 25,000-க்கும் கீழ் குறைந்து விட்டது. இறப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இறப்புகள் குறைவு

இறப்புகள் குறைவு

இந்த நிலையில் கடந்த 7 நாட்களில் இந்தியாவில் தினமும் 300-க்கும் குறைவான கொரோனா இறப்புகளே பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 256 இறப்புகள் கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,48,994 ஆக உயர்ந்துள்ளது, கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது கடந்த 7 நாட்களில் இந்தியாவில் தினமும் 300-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வருகின்றன.

தமிழகத்தில் அதிக இறப்பு

தமிழகத்தில் அதிக இறப்பு

1,48,994 இறப்புகளில் 49,521 மகாராஷ்டிராவிலும், தமிழகத்தில் 12,122 இறப்புகளும், கர்நாடகாவில் 12,090, டெல்லியில் 10,536, மேற்கு வங்கத்தில் 9,712, உத்தரபிரதேசத்தில் 8,364, ஆந்திராவில் 7,108 மற்றும் 5,341 இறப்புகளும் பதிவாகி உள்ளன.புதிய இறப்புகளில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டும் 80.47% கொண்டுள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் மட்டும் நாட்டின் மொத்த இறப்புகளில் 63% கொண்டுள்ளன.

கேரளாவில் அதிகம்

கேரளாவில் அதிகம்

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,54,254 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டு மொத்த பாதிப்பில் பாசிட்டிவ் கேஸ்கள் வெறும் 2.47% மட்டுமே. புதிய கொரோனா பாதிப்புகளில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் 80.19% உள்ளது. அதிலும் மகாராஷ்டிரா, கேரளாவில் அதிகம். கேரளாவில் தினசரி பாதிப்புகள் சராசரியாக 5,000-க்கு மேலும், மகாராஷ்டிராவில் சராசரியாக தினமும் 3,500-க்கு மேலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

24 மணி நேரத்தில் எவ்வளவு?

24 மணி நேரத்தில் எவ்வளவு?

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,036 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 1,02,86,710 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 98,83,461 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,181 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 256 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,48,994 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்கள் விகிதம் 96.08%

குணமடைந்தவர்கள் விகிதம் 96.08%

கொரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,54,254 ஆகக் குறைந்துள்ளது. இந்த வைரஸால் மேலும் 256 பேர் உயிரிழந்தனர்.. ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,48,994 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் ஒட் டுமொத்த குணமடைந்தவர்கள் விகிதம் 96.08 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

English summary
According to the Union Ministry of Health, less than 300 corona deaths have been reported in India in the last seven days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X