டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்., பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய ஹரிஷ் ராவத்.. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டதாக ராகுல் காந்தி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வரான ஹரிஷ் ராவத், நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கட்சி தலைமையிடம் அளித்துள்ளார்.

Harish Rawat resigns as General Secretary of Congress

தொடர்ச்சியாக இரு மக்களவை தேர்தல்களில் படுதோல்வியை கண்டுள்ள நாட்டின் மிக பெரிய கட்சியான காங்கிரஸ், இழந்த தனது செல்வாக்கை திரும்ப பெற கடுமையான போராட்டத்தை சந்தித்து வருகிறது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கடந்த முறை போலவே இம்முறையும் காங்கிரஸால் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலவில்லை.

இதனால் அக்கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ராகுல் நேற்று வெளியிட்ட 4 பக்க திறந்த மடலில், காங்கிரஸ் செயற்குழு கட்சிக்கு புதிய தலைவரை கண்டுபிடிக்கும் பணியை ஒரு குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். தம்மால் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட முடியாது. நான் அந்த பணியில் ஈடுபட்டால் சரியாக இருக்காது என கூறியிருந்தார்.

கட்சியின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வலியுறுத்தியும், அது எதையும் காதில் வாங்கி கொள்ளாத ராகுல், மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.

இதனால் அக்கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ராகுல் நேற்று வெளியிட்ட 4 பக்க திறந்த மடலில், காங்கிரஸ் செயற்குழு கட்சிக்கு புதிய தலைவரை கண்டுபிடிக்கும் பணியை ஒரு குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். தம்மால் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட முடியாது. நான் அந்த பணியில் ஈடுபட்டால் சரியாக இருக்காது என கூறியிருந்தார்.

மேலும் அரசியல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல, தனது போராட்டம். பாஜக மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்போ, கோபமோ இல்லை. என்னுடைய இறுதி மூச்சுவரை நாட்டுக்காக சேவையாற்றுவேன் என உருக்கமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியை அடுத்து மூத்த தலைவர்கள் வரிசையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை, ஹரிஷ் ராவத் ராஜினாமா செய்துள்ளார். ஹரிஷ் ராவத்தின் ராஜினமாவை தொடர்ந்து மேலும் பல மூத்த தலைவர்கள், தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் இன்னும் மீண்டெழ முடியாமல் தவித்து வருவதும், தொண்டர்களை மேலும் கவலை கொள்ள செய்துள்ளது.

English summary
Rahul Gandhi has officially announced his resignation from the post of Congress leader, with former Uttarakhand chief minister Harish Rawat announcing his resignation as general secretary of the Congress party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X