5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை
ராஜஸ்தான்,டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிசாவில் 5 நாட்கள் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்கப் போகிறது. மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அனல் காற்று வீச ஆரம்பித்து விட்டது.
வட இந்தியாவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. சாலைகளிலேயே ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் பட்டையை கிளப்புகிறது. வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், ஆந்திராவை தொடர்ந்து தொழிற்சாலைக்கு மின்தடை அறிவித்த 3வது மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. அதேபோல கிராமப் பகுதிகளிலும் மின்தடை நிலவி வருகிறது.

5 நாட்களுக்கு வெயில்
இதுகுறித்து வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமனி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்
தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் பதிவாகி வருகிறது. அது 113 டிகிரி பாரன்ஹீட் ஆகும். அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும்.

அனல் காற்று வீசும்
தற்போது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. டெல்லியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. டெல்லியில் இன்று 44 டிகிரி செல்சியஸ் பதிவாகும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும்.

ஆரஞ்ச் அலர்ட்
வெப்பநிலை அதிகரிப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என ராஜஸ்தான்,டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. இங்கு அதிக வெப்ப நிலை காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் தகிக்கும் வெயில்
ஒடிசாவில் தொடர்ந்து 3வது நாளாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதிக வெயில் காரணமாக ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் அதிக வெப்பம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications