கர்நாடக ஹிஜாப் வழக்கு.. அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.. தலைமை நீதிபதி ரமணா உத்தரவு
பெங்களூர்: கர்நாடக ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முதலில் விசாரிக்கட்டும் என்று காங்கிரசை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா மாணவர்கள் பலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.
இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். நேற்று இந்த வழக்கு விசாரணை 2 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் பெரிய அமர்வில் விசாரணை நடக்க உள்ளது.

3 பேர் அமர்வு
நேற்று இந்த ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பெரிய அமர்விற்கு மாற்றப்பட்டது. சர்ச்சைக்குரிய விஷயம் என்பதால் ஒரு நீதிபதி (கிருஷ்ணா தீட்சித்) அமர்வில் இருந்து 3 நீதிபதி அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் (ஏற்கனவே வழக்கை விசாரித்த தனி நீதிபதி), ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இன்று இந்த அமர்வு முதலில் இருந்து வழக்கை விசாரிக்கும்.

கோரிக்கை
அவசர இடைக்கால உத்தரவை இதில் பிறப்பிக்க மனுதாரர்கள் தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். கபில் சிபல் தொடுத்த வழக்கில் கர்நாடகாவில் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவிகள் மீது கல்லடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய விஷயம். இது மதம் தொடர்பான விஷயம். இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

கபில் சிபல்
ஹிஜாப் பிரச்சனை நாடு முழுக்க விவாதிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களிலும் இந்த பிரச்சனை பரவி வருகிறது. அதனால் இது உச்ச நீதிமன்றம் இதை விசாரிக்க வேண்டும்.தேர்வுகள் நடக்க இன்னும் 2 மாதம் மட்டுமே உள்ளது. நாங்கள் இன்று காலை மனுதாக்கல் செய்தோம். 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு இதை அவசரமாக விசாரிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம்
இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்பதால் இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க வேண்டும், என்று கபில் சிபல் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் கர்நாடக ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முதலில் விசாரிக்கட்டும். இந்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. இப்போதே துரிதமாக இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை விதிக்கிறதா என்று முதலில் பார்க்கலாம், என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications