டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

15 நிமிடம்.. இரவில் திடீரென வந்த அறிவிப்பு- பிரதமர் அலுவலகம் அப்படி சொன்னதும் என்ன நடந்தது தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று நாட்டு மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா தடுப்பு தொடர்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்

    இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் தோன்றி உரையாற்றினார். நேற்று முதலில் பிரதமர் மோடி உரையாற்ற போவதாக எந்த விதமான அறிவிப்பும் முன்கூட்டியே வெளியாகவில்லை.

    பூஸ்டர் டோஸ் என்ற வார்த்தையை சொல்லாத மோடி.. அது என்ன 'Precaution Dose'? பின்னணியில் முக்கிய காரணம்! பூஸ்டர் டோஸ் என்ற வார்த்தையை சொல்லாத மோடி.. அது என்ன 'Precaution Dose'? பின்னணியில் முக்கிய காரணம்!

    சரியாக 9.46 மணிக்கு பிரதமர் மோடி பேசுவார் என்று 9.31 மணிக்குத்தான் பிரதமர் அலுவலகம் சார்பாக போஸ்ட் செய்யப்பட்டது. பொதுவாக பிரதமர் மோடி பேசுகிறார் என்றால் குறைந்தது 2 மணி நேரங்கள் முன்பாவது அது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும்.

    பிரதமர் மோடி உரை

    பிரதமர் மோடி உரை

    ஆனால் நேற்று 15 நிமிடங்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பு வெளியானது. அதிலும் இது ஓமிக்ரான் காலம். இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் தினமும் இரட்டை மடங்கு ஆகிக்கொண்டே இருக்கிறது. திடீரென எதிர்பார்க்காத அளவிற்கு கேஸ்கள் அதிகரிக்கின்றன. பல நாடுகளில் இதனால் லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.

    பிரதமர் மோடி லாக்டவுன்

    பிரதமர் மோடி லாக்டவுன்

    இதனால் இந்தியாவிலும் லாக்டவுன் வருமோ என்ற அச்சம் நிலவியது. அதிலும் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமைதான் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் எங்கே பிரதமர் மோடி லாக்டவுன் போடப்போகிறாரோ என்ற கேள்வி எழுந்தது. பிரதமர் மோடி பேச போகிறார் என்றதும் நேற்று இணையம் முழுக்க பெரிய பரபரப்பு தொற்றிக்கொண்டது.

    பரபரப்பு

    பரபரப்பு

    பிரதமர் மோடி பேச போகிறார் என்ற அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டதும் பெரிய அளவில் விவாதங்கள், பரபரப்புகள் நிலவி வந்தன. லாக்டவுனாக இருந்தால் என்ன செய்வது, இல்லை ஓமிக்ரான் குறித்த முக்கிய அறிவிப்பாக இருந்தால் என்ன செய்வது என்று பலரும் பதற்றம் அடைந்தனர். ஏனென்றால் இதே போன்ற இரவில்தான் முன் பணமதிப்பிழப்பு அறிவிப்பும், முதல் லாக்டவுன் அறிவிப்பும் வெளியானது.

    15-18 வயது வேக்சின்

    15-18 வயது வேக்சின்

    இதனால் பலர் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் பிரதமர் மோடியோ ஓமிக்ரான் குறித்த அச்சம் வேண்டாம் என்று "பாசிட்டிவ் டோனில்" பேசினார். அதோடு, 15-18 வயது கொண்டவர்களுக்கு வேக்சின், 60 + வயது கொண்டவர்கள், முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அவருடைய பேச்சு அமைந்து இருந்தது. ஓமிக்ரான் பரவலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது. உலகின் முதல் டிஎன்ஏ வேக்சின் இந்தியாவில் அமலுக்கு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    முன்னெச்சரிக்கை டோஸ்

    முன்னெச்சரிக்கை டோஸ்

    முக்கியமாக முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மருத்துவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால் ஓமிக்ரான் ஏற்கனவே வேக்சின் போட்டவர்களையும் தாக்குகிறது. இதனால் மருத்துவ உலகில் பலர் அச்சத்துடன் இருந்த நிலையில்தான் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    English summary
    How did people react after the PM office announced that PM Modi would speak yesterday?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X