8 மேஜர் பாயிண்ட்.. கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி? இந்திய மருத்துவ சங்கம் புது ‛அட்வைஸ்’
டெல்லி: சீனாவில் கொரோனா பாதிப்பை அதிகரித்து வரும் ஓமிக்ரான் பிஎப் 7 திரிபு வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் 8 முக்கிய பாயிண்டுகளை குறிப்பிட்டு பொதுமக்களுக்கு அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் பிஎப் 7 திரிபு வைரஸால் தான் சீனாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. சீனாவை தவிர மேலும் சில நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் உலக சுகாதார நிறுவனம் கவலையடைந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அட்வைஸ் வழங்கி உள்ளது.

எங்கெங்கு கொரோனா அதிகரிப்பு?
சீனாவை போல் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 5.37 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீனாவில் பரவும் ஓமிக்ரான் பிஎப் 7 திரிபு வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், ஒடிசாவை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அலர்ட்டாகும் இந்தியா
இந்த பாதிப்பு அதிகரிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளனர். மத்திய அரசு பல்வேறு ழிகாட்டு நெறிமுறைகளை வழங்க தொடங்கி உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அலர்ட் மோடில் இந்தியா உள்ளது.

ஐஎம்ஏ வழங்கிய அட்வைஸ்
இந்நிலையில் தான் தான் கொரோனா பரவல் காரணமாக ஐஎம்ஏ எனும் இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு அட்வைஸ் வழங்கி உள்ளது. இந்த சங்கம் சார்பில் 8 முக்கிய பாயிண்டுகளை குறிப்பிட்டு அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளது.

முதல் 5 பாயிண்ட் என்ன?
அதன்படி பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும். கூட்டம் அதிகமாக சேரும் திருமணம், அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்வதை கைவிட வேண்டும்

கடைசி 3 பாயிண்ட் என்ன?
காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை முறையாக செலுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் அரசு வழங்கும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என 8 முக்கிய பாயிண்டுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது.

அரசுகளுக்கு ஒத்துழைப்பு
மேலும், இந்திய மருத்துவ சங்கம் மொத்தம் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களை கொண்டுள்ளது. இந்த குழு தொற்று நோயை எதிர்த்து போராடுவதில் உறுதியாக உள்ளது. மேலும் கொரோனா தடுப்புக்கான சிகிச்சை நடவடிக்கைகளில் அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications