எனக்கு ட்விட்டர்ல அக்கவுண்ட்டே இல்லை.. ஆள விடுங்க சாமி - ஜேஎன்யூ துணைவேந்தர் பல்டி!
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி ஸ்ரீ பண்டிட் மீது புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து தனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ஜெகதீஷ் குமார். இவர் தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றிவந்த சாந்தி ஸ்ரீ துலிபுடி பண்டிட், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர்
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்ற செய்தியை சமூக ஊடகங்கள் கொண்டாடி வந்தது. இந்த நிலையில், சாந்தி ஸ்ரீ பண்டிட் இதற்கு முன் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகளால் சர்ச்சையில் சிக்கினார். அந்தப் பதிவுகள் சர்ச்சையானதும், அந்த ட்விட்டர் கணக்கு மூடிப்பட்டது. ஆனால், சாந்தி ஸ்ரீ பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளின் ஸ்கீர்ன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

சர்ச்சை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இத்தாலியின் ரிமோட் கண்ட்ர்ரொல்ல் என்றுள்ளார். முஸ்லிம்களின் லவ் ஜிகாத் பயங்கரவாதம் என்ற கோணத்திலும் ட்வீட் செய்துள்ளார். கிறிஸ்தவர்களை அரிசி மூட்டைக்காக மதம் மாறியவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜேஎன்யூ, ஜாமியா கல்லூரி மாணவர்கள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார் சாந்தி ஸ்ரீ பண்டிட். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இத்தாலியின் ரிமோட் கண்ட்ர்ரொல்ல் என்றுள்ளார். முஸ்லிம்களின் லவ் ஜிகாத் பயங்கரவாதம் என்ற கோணத்திலும் ட்வீட் செய்துள்ளார். கிறிஸ்தவர்களை அரிசி மூட்டைக்காக மதம் மாறியவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜேஎன்யூ, ஜாமியா கல்லூரி மாணவர்கள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார் சாந்தி ஸ்ரீ பண்டிட்.

வருண் காந்தி
இந்த சர்ச்சைக்கு இடையில்தான் அவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசுக்கு ஆதரவாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் பேசியவரை நாட்டின் முக்கிய கல்வி நிலையத்தின் தலைவராக செயல்பட அனுமதிக்கலாமா என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். அதேநேரம் சாந்தி ஸ்ரீ தன்னை துணைவேந்தராக நியமித்ததற்கு, பிரதமருக்கும் உயர்கல்வித்துறைக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதை பாஜக எம்.பி வருண் காந்தி ட்விட்டரில் பகிர்ந்து, பிழையோடு கடிதம் எழுதுபவரை துணைவேந்தராக நியமித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சாந்தி ஸ்ரீ பதில்
டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, சாந்தி ஸ்ரீ பண்டிட்டை சர்ச்சைகள் தொடர்ந்துவருகின்றன. இந்நிலையில், சர்ச்சையான ட்வீட் குறித்து தற்போது ஊடகத்துக்கு பதிலளித்துள்ளார் சாந்தி ஸ்ரீ. ''எனக்கு ட்விட்டர் கணக்கே கிடையாது. நான் சமூக வலைதளங்களில் அவ்வளவு ஆக்டிவ் கிடையாது. அந்த ட்விட்டர் கணக்கு என்னுடையது போல உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்
சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பி.ஏ., வரலாறு மற்றும் சமூக உளவியல் மற்றும் எம்.ஏ., முதுகலை அரசியல் அறிவியல் பட்டங்களைப் பெற்றவர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். மகாராஷ்டிராவில் உள்ள சாவித்திரிபாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த சாந்திஸ்ரீ பண்டிட் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications