காங்கிரஸ் கட்சியின் ரிமோட் கன்ட்ரோலை கைவிடுகிறது நேரு குடும்பம்?சோனியா சொன்ன ஒற்றை பதிலால் பரபரப்பு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் ரிமோண்ட் கட்ரோல் நேரு குடும்பம் என்ற நிலைமையை மாற்ற சோனியா காந்தி விரும்புவதாகவே தெரிகிறது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் சோனியா தெரிவித்த பதில்தான் இப்போது ஹாட் விவாதமாகி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் தேர்தல் நடைபெறுகிறது. 2000-ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தி, ஜிதேந்திர பிரசாதா மோதினர். அத்தேர்தலில் சோனியா காந்தி வென்றார்.
தற்போது காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து விலகி நிற்க நேரு குடும்பம் முடிவு செய்திருக்கிறது. அதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணி முதல் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

வாக்களித்த சோனியா
டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் பலரும் வாக்களித்தனர். முற்பகல் 11 மணியளவில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். இத்தேர்தலில் வாக்களித்த பின்னர் சோனியாவை சந்திக்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால் சோனியா காந்தி ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
டெல்லியில் வாக்களித்த பின்னர் சோனியா சொன்ன பதில்: இப்படி நடக்க வேண்டும் என நீண்டகாலம் நினைத்தேன். அதாவது காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது நீண்டகால எண்ணம் என்பதை சோனியா காந்தி வெளிப்படுத்தி இருக்கிறார். சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் யாருமே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் நேரு குடும்பம் இயக்கப் போகிறதா? என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

சோனியாவின் பரபர பேட்டி
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், காங்கிரஸ் தலைவரானால் யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இருக்க மாட்டேன் என கூறியிருந்தார். பின்னர் சோனியாவின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட வெட்கப்பட மாட்டேன் எனவும் கூறியிருந்தார். அதனால் எதிர்க்கட்சிகளின் ரிமோட் கண்ட்ரோல் நேரு குடும்பம் என்ற விமர்சனம் தொடர்ந்தது.

ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் போகுமா?
இதனை மறுக்க்ம் வகையில்தான் சோனியா காந்தி தற்போது, இப்படி நடக்க வேண்டும் என நீண்டகாலம் நினைத்தேன் என கூறி, நாங்கள் ரிமோட் கண்ட்ரோலாக இருக்கப் போவதில்லை என கோடிட்டு காட்டியிருக்கிறார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகள், சிந்தனைகள் என்பவை நேரு குடும்பத்தின் கண்ணசைவிலேயே இத்தனை காலம் நடந்து வந்திருக்கின்றன. அப்படி எல்லாம் காங்கிரஸின் ரிமோட் கண்ட்ரோலை நேரு குடும்பமோ, காங்கிரஸ் தலைவர்களோ அவ்வளவு எளிதாக விட்டுவிடுவார்கள் என நம்பவும் வேண்டியதில்லை என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications