டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க கிட்டயும் வீடு இருக்கு.. வாங்க இங்கேயும் ரெய்டு நடத்தி பழகிக்கங்க.. அழைக்கிறார் ப.சிதம்பரம்!

வருமான வரித்துறையினர் சோதனை நடத்த விரும்பினால் எங்கள் வீட்டிலும் சோதனை நடத்தலாம் என்று ஐடி ரெய்டுக்கு முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: வருமான வரித்துறையினர் சோதனை நடத்த விரும்பினால் எங்கள் வீட்டிலும் சோதனை நடத்தலாம் என்று ஐடி ரெய்டுக்கு முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க அங்கங்கே ஐடி ரெய்டு நடந்து வருகிறது . கடந்த வாரம்தான் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று டெல்லி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. ம.பி முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் வீட்டிலும் கடும் சோதனை நடைபெற்றது

மேடம்.. கேப்டன் எப்படி இருக்கார்.. முதல்ல அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?மேடம்.. கேப்டன் எப்படி இருக்கார்.. முதல்ல அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?".. துளைத்தெடுத்த மக்கள்

என்ன கருத்து

என்ன கருத்து

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப. சிதம்பரம், எங்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்னும் சில நாட்களில் ரெய்டு நடத்த இருக்கிறார்கள். இது குறித்த தகவல் எனக்கு வந்தது. சிவகங்கை தொகுதியிலும், சென்னையிலும் பல இடங்களில் அவர்கள் ரெய்டு நடத்த உள்ளனர். நடத்தினால் நடத்தட்டும்.

என் வீட்டிலும்

என் வீட்டிலும்

அவர்கள் என் வீட்டிலும் கூட ரெய்டு நடத்தலாம். அவர்களை நான் வரவேற்கிறேன். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. அதனால் எங்களுக்கு அச்சமும் கிடையாது. இதற்கு முன்பே எங்கள் வீடுகளை பல அதிகாரிகள் பல முறை சோதனை செய்து இருக்கிறார்கள்.

அப்போது இல்லை

அப்போது இல்லை

அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் எதுவும் கிடைத்தது இல்லை. இப்போதும் அப்படித்தான். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கவே பாஜக அரசு இப்படி செய்கிறது. எங்கள் பிரச்சாரத்திற்கு எப்படியாவது தடங்கல் விளைவிக்க வேண்டும் என்று பாஜக கடுமையாக முயன்று வருகிறது.

பிரச்சனை

பிரச்சனை

ஆனால் இது பாஜகவிற்குத்தான் பிரச்சனையாக முடியும். முக்கியமாக மக்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ரெய்டுகளை மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு தக்க பதிலடியை மக்கள் தேர்தலின் போது கொடுப்பார்கள், என்று கூறியுள்ளார்.

English summary
I Welcome IT department to raid house too says P Chidambaram after series of IT raids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X