டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீடு கட்டுவோருக்கு, வீடு வாங்குவாருக்கு சூப்பர் சலுகை.. நிர்மாலா சீதாராமன் அறிவித்த நிவாரணம்!

Google Oneindia Tamil News

டெல்லி: வீடு கட்டுவோர் மற்றும் வீடு வாங்குவாருக்கு 20 சதவீதம் வரை வருமான வரி நிவாரணம் அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன்.

கொரோனா மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ரியல் எஸ்டேட் துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீள பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன், வீடு கட்டுவோர் மற்றும் வீடு வாங்குவாருக்கு 20 சதவீதம் வரை வருமான வரி நிவாரணம் அறிவித்தார்

கொரோனா வேக்சின் சோதனை.. ரூ. 900 கோடி ஒதுக்கீடு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கொரோனா வேக்சின் சோதனை.. ரூ. 900 கோடி ஒதுக்கீடு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விலை வரம்பு 20 சதவீதம்

விலை வரம்பு 20 சதவீதம்

அவர், கூறும் போது, "ரியல் எஸ்டேட் துறையில் நிறைய வீடுகள் தேங்கி உள்ளன. அவற்றின் விற்பனயை அதிகரிக்க, ரூ .2 கோடி வரை மதிப்புள்ள குடியிருப்பு பிரிவுகளுக்கு சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு மத்தியில் இருக்கும் விலை வரம்பை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரையில் அதிகரிக்க உள்ளோம்.

2021 ஜூன் 30 வரை சலுகை

2021 ஜூன் 30 வரை சலுகை

இதனால் வீடு வாங்குவோருக்கு அதிக வருமான வரி சலுகை கிடைக்கும். முன்னுரிமை அடிப்படையில் விற்பனையை ஊக்குவிக்க விலை வரம்பை, 2021 ஜூன் 30 வரை 10% முதல் 20% வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

நிறைய வீடுகள் விற்கும்

நிறைய வீடுகள் விற்கும்

தற்போதைய நிலையில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 43 சிஏ, சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு இடையில் 10% விலை வரம்பை அனுமதித்தது. இப்போது 20 சதவீதமாக ஆக்கப்படுவதால் நிறைய வீடுகள் விற்கும் என
எதிர்பார்க்கிறோம் மக்கள் குறைவான வரி செலுத்தினால் போதும். இந்த சலுகை வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்திற்கு உதவும். இதற்காக வருமான வரிச் சட்டத்தில் தேவையான திருத்தம் உரிய நேரத்தில் செய்யப்படும்.

18000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

18000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

பிரத மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்திற்கு 18,000 கோடி ரூபாய் கூடுதலாக ஓதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் 12 லட்சம் வீடுகள் கட்ட ஆரம்பிக்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கவும் முடியும். ஏற்கனவே 8000 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது" என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

English summary
Extending allowed difference between circle rate and agreement value to 20% instead of present 10% for sale of primary sale of residential units upto value of Rs 2 crore: FM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X