டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வார்த்தைகளை கவனமாக கையாளுங்க.. மோடியை விமர்சித்த மன்மோகன்.. பாஜக கடும் பதிலடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதா கண்டித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், ராஜதந்திரத்துக்கும், தீர்க்கமான தலைமைக்கும் தவறான தகவல் மாற்று இல்லை. பொய்யான அறிக்கைகள், வசதியான கூட்டாளிகள் மூலம் உண்மையை அடக்க முடியாது. பிரதமர் மோடி பேசும் போது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.

india china standoff: BJP hits back at Manmohan Singh

சீனா கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி தற்போது வரை இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கையும், பாங்காங் ஏரியையும் கைப்பற்ற பல முறை இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளது. அதை நாம் அனுமதிக்கவே கூடாது. சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

மேலும் சீனாவின் தாக்குதலில் எல்லையைக் காக்கும் சண்டையில் தனது உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபு, மற்றும் வீரர்கள் உயிர் தியாகத்துக்கு நீதியை உறுதி செய்யவேண்டும் என பிரதமரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு குறைவாக ஏதேனும் செய்வது மக்களின் நம்பிக்கைக்கு வரலாற்று துரோகம் என்றும் மன்மோகன் சிங் கடுமையாக கூறியிருந்தார்.

வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நியாயம் கிடைக்காவிடில் வரலாற்று துரோகம்.. மோடிக்கு மன்மோகன் கடிதம் வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நியாயம் கிடைக்காவிடில் வரலாற்று துரோகம்.. மோடிக்கு மன்மோகன் கடிதம்

மன்மோகன் சிங்கின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தொடர்ச்சியான ட்வீட்டுகளில், மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை வெற்று சொல். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். காங்கிரஸ் "எங்கள் ஆயுதப்படைகளை எப்போதும் கேள்விக்குள்ளாக்குகிறது. 130 கோடி இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியை முழுமையாக நம்புகிறார்கள், அவர் "மிகவும் சோதனை காலங்களில் தனது நிர்வாக அனுபவத்தை" காட்டியுள்ளார்.

Recommended Video

    India China Border : ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன?

    ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான ஜக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தவர்கள் 43,000 கி.மீ நீளமுள்ள எல்லையில் சண்டையே போடாமல் மோசமான யுக்திகள் மற்றும் கொள்கைகளுடன் சீனாவிடம் சரண் அடைந்தவர்கள் என்று விமர்சித்துள்ளார். மன்மோகன் சிங் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியள்ள ஜேபி நட்டா, தேச ஒற்றுமை என்பதன் அர்த்தத்தை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Jagat Prakash Nadda on twitter: Former PM Dr. Manmohan Singh’s statement is mere wordplay. Sadly, the conduct and actions of top leaders of the Congress party will not make any Indian believe such statements. Remember, this is the same INC that always questions & demoralises our armed forces.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X