டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டோக்லாமில் வாங்கிய அடி.. லடாக் பிரச்சனையில் வாயை திறக்காத சீன ஊடகங்கள்.. மௌனத்தின் பின்னணி!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா இந்தியா இடையே கடந்த ஒரு மாதமாக எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையிலும் கூட அது குறித்து சீன ஊடகங்கள் பெரிய அளவில் கருத்து எதையுமே தெரிவிக்கவில்லை. சீனாவின் இந்த மௌனம் ஏன் என்று நிறைய கேள்வி எழுப்பி உள்ளது.

Recommended Video

    சின்ன தாக்குதல் கூட இல்லாமல் சமாளித்த இந்தியா

    இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பிரச்சனை நடந்து வருகிறது. நேற்று இது தொடர்பாக இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் இருவரும் ஆலோசனை செய்தனர்.

    இதன் மூலம் எல்லையில் அமைதி திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள். சீன எல்லை பிரச்னையை இந்திய ஊடங்கங்கள் புள்ளி விவரத்துடன், உடனுக்குடன் வெளியிட்டது. மிக தெளிவான விவரங்களை இந்திய ஊடங்கங்கள் இதில் வெளியிட்டது.

    மூன்று பத்திரிகையும் பேசவில்லை

    மூன்று பத்திரிகையும் பேசவில்லை

    சீனா இந்தியா இடையே கடந்த ஒரு மாதமாக எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையிலும் கூட அது குறித்து சீன ஊடகங்கள் பெரிய அளவில் கருத்து எதையுமே தெரிவிக்கவில்லை. சீனாவின் இந்த மௌனம் ஏன் என்று நிறைய கேள்வி எழுப்பி உள்ளது. சீனாவின் முக்கியமான மூன்று செய்தி நிறுவனங்களான சீனா டெய்லி, குளோபல் டைம்ஸ், பீப்பிள் டெய்லி என்று யாரும் இந்த பிரச்சனையை கவர் செய்யவில்லை.

    எப்படி செய்யும்

    எப்படி செய்யும்

    பொதுவாக சீனாவில் பத்திரிக்கைகள் அரசு மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அரசுக்கு எதிராக எதுவும் பேச முடியாது. எல்லை பிரச்சனை, அமெரிக்காவுடன் சண்டை என்றால் இந்த செய்தி நிறுவனங்கள் எதிரி நாடுகளை கிண்டல் செய்து கட்டுரை எழுதும். முக்கியமாக நிறைய விமர்சன கட்டுரைகளை இந்த நிறுவனங்கள் எழுதும். அரசுக்கு ஆதரவாக இந்த நிறுவனங்கள் வரிசையாக கட்டுரைகளை எழுதி குவிக்கும்.

    தாமதமான கவரேஜ்

    தாமதமான கவரேஜ்

    ஆனால் இந்த முறை இந்தியாவுடன் லடாக் எல்லையில் நடக்கும் பிரச்சனை குறித்து மூன்று முக்கிய ஊடகமும் செய்தி எதையும் வெளியிடவில்லை. லடாக் எல்லையில் பதற்றம் இருக்கிறது என்று ஒரே ஒரு செய்தியை மட்டுமே இந்த ஊடங்கங்கள் வெளியிட்டது. லடாக் பிரச்சனை மே 5ம் தேதியில் இருந்து நடந்தாலும் மே 18ம் தேதி சீனாவில் ஊடகங்கள் இதை பற்றி பேசியது. அதிலும் செய்தி மட்டுமே வந்தது விமர்சன கட்டுரை எல்லாம் வரவில்லை.

    அமெரிக்கா குறித்து மட்டுமே

    அமெரிக்கா குறித்து மட்டுமே

    சீனா செய்தி நிறுவனங்கள் இந்தியாவிற்கு ஒரே ஒரு எச்சரிக்கை மட்டுமே விடுத்தது. இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கம் ஆக கூடாது. அமெரிக்காவுடன் நெருக்கம் ஆவது இந்தியாவிற்கு நல்லது இல்லை. இந்தியா சீனா உடன் நல்ல உறவை பேண வேண்டும் என்று அமெரிக்க குறிப்பிட்டது. மற்றபடி இந்தியாவை சீனா எங்கும் வெளிப்படையாக விமர்சனம் செய்யவில்லை. கிண்டல் செய்யவில்லை.

    அமைதி வேண்டும்

    அமைதி வேண்டும்

    இதனால் சீனா இந்தியாவுடன் பிரச்சனை வேண்டாம் என்று விலகி போவதாக கூறுகிறார்கள். இந்தியாவை சீன ஊடங்கங்கள் விமர்சிக்காமல் இருக்க நிறைய காரணங்கள் இருக்கும். சீனா இப்படி அமைதியாக எல்லாம் இருக்காது. இந்தியாவை பகைக்க கூடாது என்றுதான் சீனா இப்படி செயல்படுகிறது. இந்தியாவிற்கு இருக்கும் சர்வதேச ஆதரவு, ராஜாங்க உறவு காரணமாக சீனா இப்படி அமைதியாக இருந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    உத்தரவு

    உத்தரவு

    அந்நாட்டு மீடியாவை அரசுதான் கட்டுப்படுத்துகிறது. இதனால் அரசிடம் இருந்தே இது தொடர்பாக உத்தரவு சென்று இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்தியாவை சீண்டும் வகையில் எழுத வேண்டாம்.அமைதி பேச்சுவார்த்தை செல்கிறது.நீங்கள் இதில் பிரச்னையை தூண்ட வேண்டாம் என்று சீன அரசு அந்நாட்டு ஊடகங்களுக்கு உத்தரவிட்டு இருக்க வாய்ப்புள்ளது.

    டோக்லாம் அனுபவம்

    டோக்லாம் அனுபவம்

    இதற்கு முன் இந்தியா - சீனா எல்லையில் டோக்லாம் பிரச்சனை இருந்தது. அப்போது சீன ஊடங்கங்கள் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்தது. இது சீனாவிற்கு சிக்கலாக முடிந்தது. ஆனால் கடைசியில் பேச்சுவார்த்தையின் போது , சீன ஊடங்களின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.இந்த நிலையில் தற்போது அதற்கு எதிர் மாறாக சீன ஊடகம் அமைதி காக்க தொடங்கி உள்ளது. அப்போது பட்ட அடி கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

    English summary
    India China Standoff: Chinese media and magazines are quite all these days in Ladakh issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X