பார்டர் ஏரியாவில் 40 கி.மீ ரயில் சுரங்கப்பாதை.. மிரண்டு போன சீனா - வங்கதேசம்
டெல்லி: அண்டை நாடுகளான சீனா மற்றும் வங்கதேசத்திடம் இருந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் கோழிக்கழுத்து பகுதியில் (சிக்கன் நெக்) 40 கிலோமீட்டர் தொலைவுக்கு பூமிக்கடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இது அந்த இருநாடுகளையும் மிரள விட்டுள்ளது. இந்த திட்டம் ஏன் முக்கியம்? சிக்கன் நெக் பகுதி என்பது என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
பாரதத் தாயின் இரு கரங்களில் ஒன்றாக விளங்கும் வடகிழக்கு மாநிலங்களை, இந்தியாவின் இதயத்தோடு இணைக்கும் உயிர்நாடி எது தெரியுமா? அதுதான் சிலிகுரி காரிடார்... உலக நாடுகளால் 'சிக்கன்ஸ் நெக்' (Chicken's Neck) என்று அழைக்கப்படும் நம் நாட்டின் மிக முக்கியமான நிலப்பகுதி..

வெறும் 22 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்தப் பாதையைத் துண்டிக்க துடித்துக் கொண்டிருக்கும் எதிரி நாடுகளுக்கு, சிம்ம சொப்பனமாக ஒரு பிரம்மாண்டத் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது இந்திய அரசு.. ஆம்... சுமார் 40 கிலோமீட்டர் நீளத்திற்கு மண்ணுக்கு அடியில் ஒரு பிரம்மாண்ட ரயில்வே சுரங்கப் பாதை அமையப்போகிறது.
மேற்கு வங்கத்தின் டின் மைல் ஹாட் (Tin Mile Haat) முதல் ரங்காபாணி (Rangapani) வரை, சுமார் 24 மீட்டர் ஆழத்தில் இந்த ரயில் பாதை அமையவுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் ஒருபுறம்... வங்கதேசத்தின் அரசியல் மாற்றங்கள் மறுபுறம்... இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் சவால்களை முறியடிக்கப் போகிறது இந்த நிலத்தடி வியூகம்.
மேலே குண்டுமழை பொழிந்தாலும், ஏவுகணைகள் தாக்கி நிலப்பரப்பு சிதைந்தாலும், மண்ணுக்கு அடியில் இந்திய ராணுவத்தின் தளவாடங்களும், வீரர்களும், அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி வடகிழக்கு மாநிலங்களை சென்றடையும். எதிரிகளின் டிரோன்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் சிக்காத இந்த 'பாதுகாப்பு அரண்'. இந்தியாவின் இறையாண்மையை எக்காலத்திலும் விட்டுக் கொடுக்காது!"
இது வெறும் பொறியியல் சாதனை மட்டுமல்ல... நம் நாட்டின் பாதுகாப்பிற்காக எழுதப்படும் ஒரு புதிய வரலாறு! கடினமான மண் அமைப்பு, நிலநடுக்க அபாயம் என அத்தனை சவால்களையும் தகர்த்தெறிந்து, 'வலிமையான பாரதத்தை' உருவாக்க இந்தியப் பொறியாளர்கள் களம் இறங்கிவிட்டார்கள் என்பது உண்மை.
இந்த சிக்கன் நெக் பகுதி நம் நாட்டுக்கு முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் வடகிழக்கு மாநிலங்களை மேற்கு வங்கம் வழியாக சிக்கன் நெக் எனும் கோழிக்கழுத்து பகுதி வழியாக சிலிகுரி காரிடார் தான் நம்நாட்டுடன் இணைக்கிறது. இந்த கோழிக்கழுத்து பகுதி என்பது வங்கதேசத்தையொட்டி செல்கிறது. இதனால் இந்த இடத்தை குறிவைத்து வங்கதேசம் விமர்சனம் செய்து வருகிறது. சிக்கன் நெக் பகுதியை துண்டித்து வடகிழக்கு மாநிலங்களை பிரிப்போம் என்று திமிர் பேச்சு வருகிறது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு சீனாவுக்கு சென்ற வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ‛‛வங்காள விரிகுடாவின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம் தான். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார். அதாவது வடகிழக்கு மாநிலங்களையொட்டி வங்கதேசம் உள்ளது. இந்த பகுதியில் முதலீடு செய்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவர் மறைமுகமாக கூறியிருந்தார்.
இதுதவிர சிலிகுரி காரிடாரில் 2ம் உலகப் போர் காலத்தில் விமானத்தளம் அமைந்தது. இந்த விமானத்தளத்தை மீண்டும் புதுப்பித்து அங்கு சீனாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டுக்கு சீனா மற்றும் வங்கதேசத்தால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். குறிப்பாக நம் நாட்டின் கோழிக்கழுத்து பகுதி துண்டிக்கப்படும் பட்சத்தில் வடகிழக்கு மாநிலங்கள் நம் நாட்டுடன் சாலை வழியாக தொடர்பின்றி இருக்கும் நிலை உருவாகும்.
இப்படி சதிவேலையில் ஈடுபட்டு வரும் வங்கதேசம் மற்றும் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் தான் மத்திய அரசு இந்த 40 கிலோமீட்டர் ரயில்வே சுரங்க பாதை திட்டத்தை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications