இந்தியாவில் திடீரென உயரும் கொரோனா.. அடுத்த அலையின் தொடக்கமா? காரணங்களை பட்டியலிடும் ஆய்வாளர்கள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது அடுத்த அலைக்குத் தொடக்கமாக இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாவது அலை ஏற்பட்டது. டெல்டா கொரோனாவை போல ஓமிக்ரான் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரித்த போதிலும், பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல வைரஸ் பாதிப்பும் விரைவில் கட்டுக்குள் வந்தது.

கொரோனா பாதிப்பு
இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மாஸ்க் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைக் கூட நீக்கியது. இந்தச் சூழலில் உலகின் சில நாடுகளைப் போலவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் கூட இந்த இரு மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது.

அடுத்த அலை
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12847 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு நாட்டில் 12 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. அதேபோல ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பும் 14ஆகப் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் இப்போது 63,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி கொரோனா தொடர்ந்து அதிகரிப்பது அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓமிக்ரான்
இருப்பினும் வல்லுநர்கள் இதை அடுத்த கொரோனா அலை இல்லை என்றே குறிப்பிடுகின்றனர். இது உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட ஸ்பைக் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இப்போதைய சூழலில் கொரோனா வைரஸ் நம்மைவிட்டுப் போகாது என்பதால் இதுபோல வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதும் அவ்வப்போது தொடர்ந்து ஏற்படவே செய்யும். இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக நாடுகளும் கூட ஓமிக்ரானின் துணை வேரியண்ட்களால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

சிக்கல்
இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க BA.2 வகை கொரோனா காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல தென்னாப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கப் பிற ஓமிக்ரான் வேரியண்ட்கள் காரணமாக உள்ளது. இப்போது பலரும் வீடுகளிலேயே பரிசோதனை செய்து கொள்வதால் அது அரசின் கணக்கில் வராமல் போய்விடலாம்.

பின்பற்றுவதில்லை
இது குறித்து மருத்துவ வல்லுநர் டாக்டர் ஃபரா இங்கேல் கூறுகையில், "மக்கள் இப்போதெல்லாம் மாஸ்க் அணிவதில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றுவது இல்லை. அதேபோல பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. இதன் காரணமாக புதிய வேரியண்ட்கள் வந்தால் வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது" என்றார்.

பல மடங்கு அதிகரிப்பு
மும்பை உள்ளிட்ட நாட்டின் பெருநகரங்களில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மே மாதத்துடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு 950 சதவீதம் அதிகரித்துள்ளன. அங்கு மருத்துவமனையில் சேரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் கூட அதிகரித்துள்ளது. அங்கு 3 பேருக்கு BA.4 கொரோனா ஒருவருக்கு BA.5 கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல BA.2.12.1 பாதிப்பும் பரவி இருக்கும் என அஞ்சப்படுகிறது. மும்பையில் அதிகரித்ததே போலவே மற்ற நகரங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வேரியண்ட்கள்
BA.4 மற்றும் BA.2.12.1 போன்ற துணை வேரியண்ட்கள் மற்ற கொரோனா வகைகளுக்கு எதிராகப் பெற்ற நோய் எதிர்ப்புச் சக்தியைச் சமாளிக்க முடியும். முந்தைய பாதிப்பு மற்றும் தடுப்பூசியால் நோயாளிகள் லேசான நோயால் பாதிக்கப்படும் அதே வேளையில், பிற பாதிப்பு உடையவர்கள், முதியவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு இது ஆபத்தானதாக மாறலாம்.

அடுத்த அலை
இது அடுத்த அலையாக மாறினாலும் மாறாவிட்டாலும் கொரோனா பாதிப்பு இன்னும் முடியவில்லை என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். வேக்சின், முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் உலகம் இப்போது கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இருப்பினும், கொரோனா சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், வேக்சின் எடுத்துக் கொண்டு முறையான தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications