டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக நாடுகளில் இந்தியா தொடர் முதலிடம்- 24மணிநேரத்தில் 77,266 பேருக்கு தொற்று

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 77,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,46,28,074. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,70,94,173. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,35,627.

India record spike of 77,266 fresh Positives for Corona

அமெரிக்காவிலும் பிரேசிலிலும் ஒருநாளைய கொரோனா பாதிப்பு என்பது 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக 60 ஆயிரத்தை தாண்டி நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 77,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,057 பேர் 24 மணிநேரத்தில் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33.87 லட்சமாக உயர்ந்துள்ளது.

US Election 2020: இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி...டொனால்ட் ட்ரம்ப் உறுதி!!US Election 2020: இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி...டொனால்ட் ட்ரம்ப் உறுதி!!

கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 25,83,948 ஆகவும் உள்ளது. நாட்டில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 61,529. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 7,42,023.

Recommended Video

    Covishield தடுப்பூசி குறித்து Serum CEO சூப்பர் தகவல்

    இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால் ஆக்டிவ் கேஸ்கள் அடிப்படையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக ஆந்திரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India's Coronavirus tally at 33.87 lakh with a record spike of 77,266 fresh cases, & 1,057 deaths in the last 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X