இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 41,383 பேருக்கு புதியதாக தொற்று
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 41,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதால் ஒருநாள் பாதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. ஒருநாள் பாதிப்பில் நேற்று அமெரிக்கா (56,525), பிரேசில் (54,748), இங்கிலாந்து (44,104) என முதல் 3 இடங்களில் இருந்தன.
இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 42,015 ஆக இருந்தது. இந்தியாவில் கடந்த 19-ந் தேதியன்று ஒரு நாள் பாதிப்பு 38,164 ஆகவும் கடந்த 20-ந் தேதி 30,093 ஆகவும் குறைந்திருந்தது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
ஆனால் கடந்த 2 நாட்களாக திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 41,383 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ண்ணிக்கை 3,12,57,720 ஆக உள்ளது.

எத்தனை பேர் மீண்டனர்?
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,652. இதுவரை மொத்தம் 3,04,29,339 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர்.

507 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 507. நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,18,987.

அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,09,394. இது கடந்த 19-ந் தேதியன்று 3.89 லட்சமாக இருந்தது. இதுவரை இந்தியா முழுவதும் மொத்தம் 41.78 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications