ராணுவ ஆதரவு தாருங்கள்.. இந்தியாவிடம் உதவி கேட்கும் ஆப்கான்.. நடப்பதே வேறு.. கொக்கரிக்கும் தாலிபான்!
டெல்லி: எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்போம் என்று ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஆப்கானின் தற்போதைய அரசுக்கு ராணுவ ரீதியான எந்த உதவியையும் இந்தியா செய்ய கூடாது என்று தாலிபான் தெரிவித்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்று வரும் நிலையில் இன்னும் 6 மாதங்களில் அங்கு முழுமையாக தாலிபான்கள் ஆட்சி அமைந்து விடுமோ என்ற அச்சம் ழுந்துள்ளது. 1996-2001ல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்திய போது காஷ்மீரில் நிறைய தீவிரவாத தாக்குதல் நடந்தது.
தாலிபான் உதவியுடன் பாகிஸ்தான் அமைப்புகள் பல காஷ்மீரில் தாக்குதல்களை நடத்தியது. தற்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் எழுச்சி பெற்று இருப்பது பாதுகாப்பு ரீதியாக இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

என்ன கோரிக்கை
தற்போது தாலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் படைகள் வேகமாக வீழ்ந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்போம் என்று ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் பரீத் மாமுன்ட்சே அளித்த பேட்டியில், தாலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்தியாவின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இந்தியா உதவி
இந்தியாவின் ராணுவ உதவியை நாங்கள் வரும் நாட்களில் பெற வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகிறன்றன. இதனால் ஆப்கானிஸ்தான் படைகள் போதிய ஆதரவு இன்றி இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தியாவின் உதவியை ஆப்கானிஸ்தான் நாடி உள்ளது.

தாலிபான்
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவ கூடாது என்று தாலிபான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாலிபானின் அரசியல் பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா உதவி செய்வதில் தவறு கிடையாது. இதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பும் கூட ஆப்கானிஸ்தானுக்கான உதவியை வரவேற்கிறோம்.

வரவேற்பு
ஆப்கானிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக, கட்டமைப்பு ரீதியாக இந்தியா உதவி செய்வதை தாலிபான்கள் எப்போதும் வரவேற்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசுக்கு இந்தியா உதவ கூடாது. இந்தியா இதில் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இந்தியா தற்போது உள்ள ஆப்கான் அரசுக்கு எந்த மாதிரியான ராணுவ உதவியையும் செய்ய கூடாது.

இந்தியா
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் தாலிபான் அரசியல் ரீதியாக நட்பாக இருக்கவே விரும்புகிறது. ஆனால் ஆப்கானின் அரசியல் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலக நாடுகள் யாரையும் நாங்கள் உள்ளே அனுமதிக்க மாட்டோம். இதற்கான முயற்சியில் வெளிநாடுகள் ஈடுபட்டால் நடப்பதே வேறு, என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கான்
ஆப்கானிஸ்தான் அரசுக்கு இந்திய ராணுவம் உதவ கூடாது என்று தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் தாலிபான்களுக்கு இந்தியா எங்கும் நேரடியாக ஆதரவு அளித்தது இல்லை. நேற்று நடந்த ஷாங்காய் கோ ஆபரேஷன் மீட்டிங்கில் கூட இந்தியா இதே கருத்தை முன் வைத்தது. ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அங்கு ஆயுதத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கூடாது. தீவிரவாதத்திற்கு நாங்கள் ஆதரவு தர முடியாது. எந்த மாற்றமும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நடக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications