ராணுவத்திற்கு இவ்வளவு செலவிடுகிறதா இந்தியா. . அமெரிக்கா, சீனா வரிசையில் 3வது இடம்
டெல்லி: நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த ராணுவத்துக்காக இந்தியா செலவிட்டுள்ள தொகையானது உலக நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக மிக அதிக தொகை செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் ராணுவம், அண்டை நாடுகளிடம் இருந்து வரும் சவாலையும் எப்போதும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியுள்ளது.
அதுவும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எல்லா முனைகளிலும் அச்சுறுத்தல் உள்ளது. ஒருபக்கம் சீனா இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கிறது.

தயாராக இந்திய ராணுவம்
பாகிஸ்தானை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லையில் சீண்டலில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு வழி வகுக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பயிற்சி அளித்தே இந்தியாவுக்குள் நாச வேலைகளை செய்வதற்காக ஊடுருவ வைப்பதற்கு திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய காரணங்களால் இந்தியா தனது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. குறிப்பாக நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் மூலமாக தாக்குதல் நடத்தும் முறை அதிகரித்துள்ளதால் அதற்கும் சற்றும் சளைக்காமல் நமது ராணுவம் தயாராகி உள்ளது.

3-வது இடத்தில் இந்தியா
அந்த வகையில், உலக அரங்கில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியா, தனது ராணுவத்திற்கு அதிகம் செலவும் செய்யும் நாடுகள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது. இந்தப்பட்டியலை உலக நாடுகளின் ராணுவ பட்ஜெட் குறித்த ஆய்வு செய்யும் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஒரு ஆய்வுக்குழு (SIPRI) வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், 2- ஆம் இடத்தில் சீனாவும் உள்ளன. நாடாளுமன்றத்தில் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஒரு ஆய்வுக்குழு வெளியிட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, பாதுகாப்புக்கான மத்திய இணை அமைச்சர் அஜய் பட் பேசினார்.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக
அப்போது, கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அஜய் பட், பிற நாடுகள் தங்கள் ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறது என்பதை பற்றிய தரவுகளை நமது நாடு பராமரிப்பது இல்லை. இருப்பினும், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உலக அளவில் ரானுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலிடத்தில் உள்ள அமெரிக்கா தனது ராணுவத்திற்கு USD 800,672.20 மில்லியன் செலவு செய்கிறது. சீனா USD 293,351.90 செலவு செய்கிறது. இந்தியா 76,598.00 மில்லியன் டாலர் செய்கிறது" என்றார்.

வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதியா?
அப்போது 2017-21 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மொத்த ஆயுத கொள்முதலில் 50 சதவீதத்திற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஜய் பட், இல்லை. . 2017-21 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்தியா வெளிநாடுகளில் இருந்து 33.97 சதவீதம் முதல் 41.60 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்துள்ளது" என்றார். கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அஜய் பட், இந்திய கடற்படையால் நமது கடல்பகுதிகள் ரியல் டைம் கண்காணிப்பு எனும் நேரடி கண்காணிப்பு செய்யப்படுகின்றன. "46 ரேடார் நிலையங்களில் உள்ள சென்சார்கள் மூலம் இவை மேற்கொள்ளப்படுகின்றன. கடலோர கண்காணிப்பு நெட்வொர்க்குகளின் கீழ் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டில் இருந்தே ரேடார்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இத்தகைய ரேடார்களினால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications