இந்தியாவுக்கு குட் நியூஸ்? பெட்ரோல், டீசல் விலை சரிய வாய்ப்பு! ஓபெக் நாடுகளின் அறிவிப்பால் நிம்மதி!
டெல்லி: ஈரான் போர் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகயிருக்கிறது. இந்தியாவும் அச்சத்தில் இருக்கும் நிலையில், ஓபெக் நாடுகள் எடுத்திருக்கும் முடிவு, நமக்கு சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
OPEC+ (ஓபெக் பிளஸ்) என்பது உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒரு சக்திவாய்ந்த கூட்டமைப்பாகும். இது கச்சா எண்ணெய் விலையை சர்வதேச சந்தையில் கட்டுப்படுத்தவும், உற்பத்தியைச் சீராக வைத்திருக்கவும் செயல்படுகிறது.

தற்போது ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிலைமையை சமாளிக்க இந்த நாடுகள் முன் வந்திருக்கின்றன. இன்று நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில், சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட எட்டு நாடுகள் இணைந்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. அதன்படி, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தன்னார்வ உற்பத்தி குறைப்பில் இருந்து, ஒரு நாளைக்கு 2,06,000 பேரல்கள் (206k bpd) உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி மாற்றமானது வரும் மே 2026 முதல் நடைமுறைக்கு வரும். 2023-இல் அறிவிக்கப்பட்ட 1.65 மில்லியன் பேரல்கள் குறைப்பை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப படிப்படியாக மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன.
- சவுதி அரேபியா
- ரஷ்யா
- ஈராக்
- ஐக்கிய அரபு அமீரகம்
- குவைத்
- கஜகஸ்தான்
- அல்ஜீரியா
- ஓமன்
ஆகிய நாடுகள் இந்த முடிவை எடுத்திருக்கின்றன. உலகளாவிய எண்ணெய் தேவையைச் சமாளிக்கவும், விலையைச் சீராக வைத்திருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரத்தைப் பொறுத்து இந்த 1.65 மில்லியன் பேரல்கள் முழுவதையும் மீண்டும் உற்பத்தி செய்ய ஓபெக் பிளஸ் தயாராக உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2,06,000 பேரல்கள் (206k bpd) என்பது, ஈரான்-இஸ்ரேல் போரினால் உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள சுமார் 12 முதல் 15 மில்லியன் பேரல்கள் வரையிலான விநியோகத் தட்டுப்பாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய அளவாகும். இது மொத்தத் தட்டுப்பாட்டில் வெறும் 2% கூட இல்லை. எனவே இந்தியாவில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications