சீன பதற்றத்திற்கிடையே.. வங்கக் கடல் வந்த அமெரிக்க நவீன போர்க் கப்பல்.. இந்திய கடற்படையுடன் பயிற்சி
டெல்லி: வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே, இந்தியா மற்றும் அமெரிக்க போர்க்கப்பல் இணைந்து ராணுவ ஒத்திகை நடத்தியுள்ளன.
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லை பதற்றம் நிலவும் இந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ், என்ற, விமானந்தாங்கி போர்க் கப்பலை, அமெரிக்கா இந்த ராணுவ பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சில பகுதிகளில் தங்கள் ராணுவத்தை சீனா பின் வாங்கிக் கொண்டாலும், இன்னும் சில பகுதிகளில் அதன் ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சீனாவுக்கு எதிராக
சீனாவுக்கு எதிராக உலக நாடுகளின் அணிதிரட்டலுக்கு, இந்தியா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் கடல்சார் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை ரோந்துகள், பயிற்சிகளில் ஈடுபடுகிறது.

மிகப்பெரிய போர்க் கப்பல்
இந்திய பசிபிக் மண்டலத்தில் இந்த நாடுகளின் கடற்படை சமீபகாலமாக மேலும் தங்களது நட்பை பலப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் PASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் என்றழைக்கப்படுவது அமெரிக்காவின், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்பதாகும்.

பயிற்சி தீவிரம்
இந்தப் போர்க்கப்பல், இந்திய கடற்படை போர்க்கப்பல்களுடன், பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தவிர, டிக்கோடெரோகா, யுஎஸ்எஸ் பிரின்ஸ்டன், யுஎஸ்எஸ் ஸ்டெரெட் மற்றும் யுஎஸ்எஸ் ரால்ப் ஜான்சன் ஆகிய போர்க் கப்பல்களும், இன்று இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்றன.

இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்
கடந்தமாதம் இதுபோன்ற கடற்படை பயிற்சியில், ஜப்பான் நாட்டு கடற்படையுடன் இணைந்து செயல்பட்டது இந்திய கடற்படை. அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் கடந்த சனிக்கிழமை மலாக்கா நீரிணை வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது.
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சுமார் 100,000 டன் எடையுள்ளது. 90 போர் விமானங்களை சுமக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications