டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐபிஎல்ல நிறுத்துங்க... வீரர்களோட உயிரோட விளையாடாதீங்க... முன்னாள் வீரர் கோரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி கேகேஆர் -ஆர்சிபி இடையில் நடைபெறவிருந்த நிலையில் கேகேஆர் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேன்சல்ஐபில் என்பது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் முன்னாள் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகினற்னர்.

கேன்சல் ஐபிஎல்... ட்விட்டர்ல ட்ரெண்டிங்... கேன்சல் செய்யற ஐடியா இல்லீங்க... பிசிசிஐ உறுதி

30வது போட்டி தள்ளிவைப்பு

30வது போட்டி தள்ளிவைப்பு

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 30வது போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதவிருந்தன. இந்நிலையில் கேகேஆர் அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த பாதிப்புகள்

அடுத்தடுத்த பாதிப்புகள்

கடினமான பயோ பபுள் சூழலையும் மீறி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் அணிகளுக்கிடையில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதேபோல சிஎஸ்கேவின் வீரர்கள் அல்லாத மூவருக்கும் டிடிசிஏவின் ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்ட்

ட்விட்டரில் ட்ரெண்ட்

இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ட்விட்டரிலும் கேன்சல்ஐபிஎல் என்பது ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே முன்னாள் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளை த்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழல்

பாதுகாப்பற்ற சூழல்

இதனிடையே, முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத், பாதுகாப்பான பயோ பபுளில் திடீரென கொரோனா பாதிப்பு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது பயோ பபுளில் பாதுகாப்பின்மையை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கேள்விகளை எழுப்பிய பாதிப்பு

கேள்விகளை எழுப்பிய பாதிப்பு

இந்த கடினமான சூழலிலும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த பிசிசிஐ தீவிரமாக இருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்கள் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு கொண்டாட்டத்தை அளித்து வருவதாக தான் நம்பியதாகவும் ஆனால் தற்போது கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
I thought they were in a bubble and safe from everything and entertaining cricket lovers and the country -Kirti Azad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X